மேலும் அறிய
Advertisement
"குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டியதால்.." : கடிதம் எழுதிவைத்து சிதம்பரம் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
"எனக்கு ரொம்ப நாள் வாழனும்னு ஆனா கடவுள் என்ன வாழ விடல…" குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டியதால் தற்கொலை செய்கிறேன் என கடிதம் எழுதிவைத்து சிதம்பரம் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
"எனக்கு ரொம்ப நாள் வாழனும்னு ஆனா கடவுள் என்ன வாழ விடல…" : குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டியதால் தற்கொலை செய்கிறேன் என கடிதம் எழுதிவைத்து சிதம்பரம் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
சிதம்பரம் அருகே உள்ள தெற்கு பிச்சாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் இவரது மகள் அஜினாதேதி (21). இவர் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் கிராமத்தில் உள்ள அரசு கல்லூரியில் எம்எஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் வாண்டியாம்பள்ளம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்து சிறிது காலம் கல்லூரிக்கு சென்று வந்து உள்ளார். ஆனால் கடந்த சில தினங்களாக சொந்த ஊரான தெற்கு பிச்சாவரத்தில் இருந்து வந்து உள்ளார்.இந்த நிலையில் இன்று காலை அஜினாதேவி வீட்டில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்து உள்ளார் .
பின்னர் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அண்ணாமலைநகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அஜினாதேவியின் சடலத்தை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அஜினாதேவி இறக்கும் முன் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்து உள்ளார். அந்த கடிதத்தில்,தான் குளிப்பதை ஒருவர் வீடியோ எடுத்து மிரட்டுவதாகவும், அவனிடம் இருந்து தான் தப்பிக்க வேறு வழி தெரியவில்லை, அதனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார், இது மட்டும் இன்றி தனக்கு ரொம்ப நாள் வாழ வேண்டும் என ஆசை ஆனால் என்ன பண்ண கடவுள் என்ன வாழவிடவில்லை என உருக்கமாக குறிப்பிட்டு இருந்தார். இந்த கடிதத்தை கைப்பற்றிய காவல் துறையினர் சம்பவம் குறித்து வழக்குப் பதவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் கூறிய அவரது தாய் மற்றும் உறவினர்கள், காலையில் எழுந்து பார்த்த போது வீட்டில் உள்ள மேஜையில் செல்போன் கொலுசு, கடிதம் இருந்ததாகவும், பின்னர் மகளைக் காணாமல் வீட்டின் பின்பக்கம் சென்று தேடிய போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறினர், அவர் கடிதத்தில் குறிப்பிட்டபடி இந்த செயலில் ஈடுபட்டது யார் என்பது தெரியவில்லை. இது குறித்து காவல் துறையினர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.
நேற்று முன் தினம் கடலூரில் காதலன் கண் முன்னே காதலியை மூன்று நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.மேலும் நேற்று தண்ணீர் கேட்க சென்ற 16 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியது, இவ்வாறு தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது கடலூர் மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் , சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion