சேத்துப்பட்டு : சாலையோர மரத்தில் மோதி எரிந்த கார்.. மருத்துவ தம்பதியினருக்கு நேர்ந்த விபரீதம்..
காரில் பயணித்த மருத்துவ தம்பதியினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த ஜெயசீலன் வயது (55) இவருடைய மனைவி சுகந்தி வயது (45) ஆகிய இவர்கள் இருவரும் மருத்துவர்கள் ஆரணி நகராட்சியில் சொந்தமாக கிளினிக் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இவர்களுடைய மகள் சுகன்யா இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகின்றார். மாததில் ஒருமுறை தன்னுடைய மகளை பார்த்து வருவதற்கும் மருத்துவ தம்பதியினர் சென்று வருவார்கள்.
பின்னர் எப்போழுதும் போன்று தன்னுடைய மகளை பார்ப்பதற்காக புதுச்சேரிக்கு நேற்று சென்று பார்த்து விட்டு இன்று சொந்த ஊரான ஆரணி பகுதிக்கு சொகுசு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மருத்து தம்பதியினர் சேத்துப்பட்டில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் தத்தனூர் அருகே எதிர்பாராத விதமாக மருத்துவ தம்பதியினர் சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி பின்பு சாலையோரோத்தில் உள்ள மரத்தில் பயங்கரமான சத்தில் மோதியது.
சொகுசு கார் மோதியவுடனே கார் திடீரென தீப்பற்றி எரிய துடங்கியுள்ளது. அப்போது காரை ஓட்டி வந்த மருத்துவர் சுகந்தி மற்றும் அவரது கணவர் மருத்துவர் ஜெயசீலன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். பயங்கர சத்தத்துடன் கார் மோதியதையடுத்து இந்த சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் படுகாயம் அடைந்த மருத்துவ தம்பதியினரை காப்பாற்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சேத்துப்பட்டு அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டாக்டர் ஜெயசீலன் சற்று நேரத்துக்கு முன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சேத்துப்பட்டு தீயணைப்புத் துறையினர் சொகுசுகாரில் பற்றி எரிந்த தீயை அணைக்க போராடினர். ஆனாலும் தீயணைப்பு துறையினர் நெருப்பை கட்டுப்படுத்த முடியாததால் கார் முற்றிலுமாக எரிந்து நாசமானது.
மேலும் இந்த சம்பவம் குறித்து சேத்துப்பட்டு காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்து நேரிட்டது எப்படி காரில் தீ பிடித்தது எப்படி என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுடனர். இந்த விசாரணையில் மருத்துவர்களின் சொகுசு கார் டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரம்பி இருந்ததாலும் கார் மரத்தில் மோதிய வேகத்தில் பெட்ரோல் டேங்கில் இருந்து பெட்ரோல் வெளியேறியதால் தீப்பிடித்து இருக்கும் என காவல்துறையினர் வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் சேத்துப்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.