மேலும் அறிய

ஜீன்ஸ் ஐஸ்வர்யாராய் என நினைப்பு - ‛நானே அக்கா; நானே தங்கை’ : ஃபேஸ்புக்கில் கவர்ச்சியாக பேசி மோசடி செய்த பெண்!

சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் தாலுகா, மூலக்கரை கிராமத்தை சேர்ந்தவர் பாரதிராஜா (25).

சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் தாலுகா, மூலக்கரை கிராமத்தை சேர்ந்தவர் பாரதிராஜா (25). இவர், திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் காவலராக பணிபுரிந்தார். தற்போது, இவர் கடந்த 3 மாதமாக சென்னை, திருவொற்றியூரில் உள்ள கடற்படையில் பணியாற்றி வருகிறார். இவர், சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். 

அந்த புகார் மனுவில், “கடந்த ஜனவரி மாதம் எனது ஃபேஸ்புக்கில் ஆவடி, ஆனந்தம் நகர், பாரதிதாசன் தெருவைச் சார்ந்த ஐஸ்வர்யா (26) என்ற இளம்பெண் நட்பானார். அவர், தான் டாக்டருக்கு படிப்பதாகவும், தன்னை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி செல்போனில் அடிக்கடி கவர்ச்சிகரமாக பேசியும் வந்தார். திருமணம் தொடர்பாக பூஜை செய்யவும், நகைகள் வாங்கவும் பணம் வேண்டும் என ஐஸ்வர்யா என்னிடம் கூறினார். அதனால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு முதல் தவணையாக 4 லட்சம் கேட்டார். இதனையடுத்து, அந்த பணத்தை ஐஸ்வர்யாவின் தந்தை பழனியின் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்தேன். 


ஜீன்ஸ் ஐஸ்வர்யாராய் என நினைப்பு - ‛நானே அக்கா; நானே தங்கை’ : ஃபேஸ்புக்கில் கவர்ச்சியாக பேசி மோசடி செய்த பெண்!

அதன் பிறகு, அவர் கொஞ்சம் கொஞ்சமாக 10 லட்சம் என மொத்தம் 14 லட்சம் வரை என்னிடம் பணம் வாங்கி உள்ளார்.  இதற்கிடையில், ஐஸ்வர்யா தனக்கு ஒரு  தங்கை இருப்பதாக கூறியதால் அவரை, எனது பெரியப்பா மகன் மகேந்திரனுக்கு ஃபேஸ்புக் மூலம் அறிமுகம் செய்து வைத்தேன். ஆனால், ஐஸ்வர்யாவுக்கு தங்கை என்று யாரும் கிடையாது. அவரே தான் இரு ஃபேஸ்புக் கணக்கு மூலமாக இருவரிடமும் மாறி மாறி பேசி ஏமாற்றி வந்துள்ளார்.  மேலும், ஐஸ்வர்யா மகேந்திரனையும் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி உள்ளார்.  இதனை நம்பி அவரும் கடந்த 6 மாதமாக கொஞ்சம் கொஞ்சமாக 20  லட்சம் வரை வங்கி கணக்கில் பரிமாற்றம் செய்துள்ளார். மேலும், அவர் ஜஸ்வரியாவுக்கு ஒரு சவரன் தங்க சங்கிலி, ஒரு ஜோடி கொலுசு ஆகியவற்றை வாங்கி   கொரியர்  மூலம் அனுப்பி வைத்து உள்ளார். அதன் பின்பு, கடந்த ஒரு மாதமாக ஐஸ்வர்யா இருவரின் தொடர்பையும் துண்டித்துள்ளார்.  இதனையடுத்து, நாங்கள் இருவரும் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். 

கமிஷனர் சங்கர் ஜீவால் புகாரை ஆவடி காவல் நிலையத்திற்கு அனுப்பி விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதனையடுத்து, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெய்கிருஷ்ணன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும், போலீசார் ஐஸ்வர்யா மற்றும் பெற்றோர்களை அழைத்து விசாரணை நடத்தினர். இதில், ஐஸ்வர்யா டாக்டருக்கு படிக்கவில்லை என்பதும், அவர் +2வரை படித்து உள்ளார் என்பதும் தெரியவந்தது. மேலும் அவருக்கு திருமணமாகி சரண்குமார் என்ற கணவரும் இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகளும் உள்ளார். 

ஐஸ்வர்யா தனது அக்கா வைத்திருக்கும் ஃபேன்ஸி ஸ்டோரில் ஊழியராக பணியாற்றி வருவதோடு, தற்போது, ஐஸ்வர்யா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இவர் தனது இரு ஃபேஸ்புக் கணக்குகளில் அழகான ஒரு பெண்ணின் படத்தை வைத்து பாரதிராஜா, மகேந்திரன் இருவரையும் தனது கவர்ச்சியான பேச்சால் ஆசைவார்த்தை கூறி பண மோசடி செய்துள்ளார் என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். 

மேலும், ஐஸ்வர்யா பண மோசடி செய்ததையும், அந்த பணத்தை ஆடம்பரமாகவும் செலவும் செய்ததாக போலீசாரிடம்  ஒப்புகொண்டார். புகாரின் அடிப்படையில் போலீசார் ஜஸ்வர்யாவை நேற்று மாலை கைது செய்தனர். மேலும், போலீசார் ஐஸ்வரியா வேறு யாரிடமும் முகநூல் மூலம் பழகி பண மோசடி செய்து உள்ளாரா என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஃபேஸ்புக் மூலம் இளம்பெண் பழகி திருமண ஆசை காட்டி கவர்ச்சிகரமாக பேசி போலீஸ்காரர், அவரது சகோதரர் ஆகியோரிடம் 34 லட்சம் பண மோசடி செய்த சம்பவம் ஆவடியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜீன்ஸ் படத்தில் அண்ணன் பிரசாந்தை திருமணம் செய்ய ஐஸ்வர்யாராய் நானே அக்கா, நானே தங்கை எனக்கூறி தம்பி பிரசாந்திடமும் அல்லல் படுவார். ஆனால் இங்கு கொஞ்சம் மாற்றம். அண்ணனையும் தம்பியையும் சேர்ந்து ஏமாற்றி அவர்கள் அளித்த பணத்தில் உல்லாசமாக இருந்துள்ளார் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யா என பெயர் வைத்ததால் தன்னை ஐஸ்வர்யாராய் என்றே எண்ணிவிட்டார் போலும். 

தலைப்பு செய்திகள்

தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget