மேலும் அறிய
பாடல் கேட்டு கொண்டு சென்ற ஐடி ஊழியர்..! ரயிலில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்..!
ஹெட்செட்டில் பாட்டு கேட்டுக் கொண்டு தண்டவாளத்தைக் கடந்த ஐ டி ஊழியர் ரயில் மோதி பரிதாப உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

ரயில் விபத்து
சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுவாக தொலைதூர பயணத்தின் போது பாடல் கேட்டு கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது.
பல ஸ்மார்ட் போன்கள் வர துவங்கியதில் இருந்து, ஹெட்செட் போட்டுக் கொண்டு அவரவர் தனியாக பாட்டு கேட்பதும் பிறரிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டு செல்வதும் வழக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக தினமும் பேருந்துகள், ரயில் உள்ளிட்டவற்றில் பயணம் செய்யும் ஊழியர்கள் பலரும் தினமும் காலையில், ஹெட் செட் போட்டுக்கொண்டு வேலைக்கு செல்வார்கள். அதே போல மீண்டும் ஹெட்செட்டில் பாட்டு கேட்டுக் கொண்டே திரும்புவது வழக்கமாக உள்ளது. இதுபோல ஹெட்செட்டில் பாட்டு கேட்டுக்கொண்டே, தண்டவாளம் அருகே நடந்து சென்ற ஐடி ஊழியர் ஒருவர் உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கம் அருகே நண்பர்களுடன் வசித்து வருபவர் விஜய் (வயது 27). இவர் சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தினமும் இவர் ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தை தாண்டி தனது வீட்டிற்கு செல்வார். இந்நிலையில் அவர், பணி முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருக்கும்போது ஊரப்பாக்கம் வண்டலூர் இடையே தண்டவாளத்தை கடந்து வீட்டிற்கு செல்லும்போது ஹெட்செட் மாட்டிக்கொண்டு தண்டவாளத்தை கடந்ததாக கூறப்படுகிறது

இந்நிலையில் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி வந்த விரைவு ரயில் விஜய் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்பு இது குறித்து தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாம்பரம் ரயில்வே போலீசார் பிரேதத்தை கைப்பாற்றிய உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்பு இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறையிடம் தொடர்பு கண்டு கேட்ட பொழுது, ஊரப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் விஜய் . இவர் சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள பிரபல தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நீரில இவர் ஊரப்பாக்கம் தண்டவாளம் அருகே உயிரிழந்த விஜயின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் ஹெட்செட் போட்டுக் கொண்டே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















