மேலும் அறிய
Advertisement
அப்பாடியோ கிலோ கணக்கில் கஞ்சா..! தொடரும் வேட்டை..! என்ன நடக்கிறது ?
ஒடிசாவில் இருந்து கடத்திவரப்பட்ட 6 கிலோ கஞ்சா பறிமுதல் ஒருவரை கைது செய்தது காவல்துறை
தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களில், கஞ்சா விற்பனையை அறவே ஒழிக்கும் பொருட்டு தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், தாம்பரம் மதுவிலக்கு உதவி ஆணையாளர் ரவிச்சந்திரன் தலைமையில், தாம்பரம் மதுவிலக்கு ஆய்வாளர் சாலினி, கூடுவாஞ்சேரி மதுவிலக்கு ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் பள்ளிகரணை மதுவிலக்கு ஆய்வாளர் சரவணன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேருந்தை நிறுத்தி சோதனை..
இந்த நிலையில் பள்ளிக்கரணை மதுவிலக்கு ஆய்வாளர் சரவணன் தலைமையிலான தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அதிகாலை நாவலூர் அருகில் மாநகர பேருந்தை நிறுத்தி சோதனை செய்தததில் அதில் சந்தேகத்திற்கு இடமாக பயணம் செய்தவனை பிடித்து விசாரணை செய்து, அந்த நபர் வைத்திருந்த சந்தேகத்துக்கு இடமான பையை, சோதனை செய்து அதில், தலா 2 கிலோ எடை கொண்ட மூன்று பொட்டலங்கள் இருந்துள்ளது.
மேலும் விசாரணை செய்ததில், ' தான் ஒடிசாவை சேர்ந்த அலேக் நாயக் வ/24, த/பெ. தனு நாயக், கஞ்சம் மாவட்டம், ஒடிசா என்றும் நாவலூரில் அறை எடுத்து தங்கி கட்டிட வேலைக்கு செல்வதாக கூறி, ஒடிசாவில் இருந்து இன்று ரயிலில் கஞ்சா கடத்தி வந்து இங்கு விற்பனை செய்வதாக ஒப்புக்கொண்டான். மேலும் , நாவலூரில் தங்கி இருந்த அறையை சோதனை செய்ய அங்கு கஞ்சா எடை போடும் சிறிய எலக்ட்ரானிக் எடை கருவி இருந்ததையும், கைப்பற்றி கஞ்சாவுடன் தாழம்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் காவல்துறையினர் அவனை அழைத்தனர். கஞ்சா விற்றவனை கைது செய்த பள்ளிக்கரணை மதுவிலக்கு ஆய்வாளர் மற்றும் அவரது தனிப்படையினரை தாம்பரம் காவல் ஆணையாளர் அ.அமல்ராஜ் இ.கா.ப, அவர்கள் பாராட்டினார்.
காவல்துறை எச்சரிக்கை
மேலும் இச்சோதனை தொடரும் எனவும் கடந்த பன்னிரண்டு மாதங்களில் 126 வழக்குகள் பதியப்பட்டு, 273 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 443.800 கிலோ கஞ்சா, 100 கிராம் கொகைன், 46 கிராம் மெத்தபட்டமைன் (மதிப்பு 6 லட்சம்), LSD Stamp 105 (மதிப்பு 1 லட்சம்), 11783 போதை மாத்திரைகள், ஹெராயின் 0.546 கிராம், கஞ்சா ஆயில் 890 ML, 48 இருசக்கரவாகனம், 5 மூன்று சக்கர வாகனம், 14 நான்கு சக்கரவாகனம், மேலும் 4368 கிலோ குட்கா கைப்பற்றப்பட்டது. 33 பேர் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கு, குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் கஞ்சா விற்பனை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கைகள் தொடரும் எனவும் காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion