மேலும் அறிய
Advertisement
Crime : அண்ணாத்த பட நடிகைக்கு மாமனார் பாலியல் தொல்லை.. கொலைவெறி தாக்குதல்? அதிரவைத்த புகார்..
மாங்காடு அருகே பாலியல் தொல்லை கொடுத்து மாமனார் கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக துணை நடிகை புகார் தெரிவித்துள்ளார்.
சென்னை போரூர் பகுதியில் வசித்து வரும் துணை நடிகை மாங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது மாமனார் சரவணன்வேல்(73), மாமியார் ஆகியோர் அடித்து துன்புறுத்தியதில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்திருந்தார்.
இது குறித்து மாங்காடு போலீசார் விசாரித்து வரும் நிலையில் இன்று துணை நடிகை பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது தனது கணவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை மறைத்து தனக்கு திருமணம் செய்து வைத்து விட்டதாகவும், தற்போது அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தனது மாமனார் நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்றும் மாமியார் கல்லூரியில் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் என்றும் தெரிவித்தார். தான் சினிமாவில் நடிப்பதை பிடிக்காமல் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னை கட்டையால் சரமாரியாக தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று, தற்போது புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். தன்னை தாக்கியதாக மாமனார், மாமியார் மீது துணை நடிகை அளித்த புகார் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், துணை நடிகையின் 15 வயது மகள் அளித்த புகாரின் பேரில் துணை நடிகையின் மாமனார் சரவணவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தலை மறைவாக இருக்கும் சரவணவேலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தன்னை தாக்கியதாக மாமனார் மாமியார் மீது துணை நடிகை அளித்த புகார் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
மேலும் புகார் தெரிவித்துள்ள துணை நடிகை ரஜினியின் அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், சிவகுமார் சபதம், நட்பே துணை, தேவராட்டம், துப்பறிவாளன், சீரியலில் பேரன்பு உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion