மேலும் அறிய

Crime: 13 வயது முதல் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு.. சப்-இன்ஸ்பெக்டர் போக்சோவில் கைது

சப் இன்ஸ்பெக்டர் ஒருவர், பெண்ணிற்கு நீண்ட ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அதில்  சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் சிறுமிக்கு நீண்ட ஆண்டுகள் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ள சம்பவத்திற்கு கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ஆலந்தூர் பகுதியில் அமைந்துள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர்  பாண்டியராஜ்(50). இவர் சென்னை மாநகர காவல்துறையின் வெடிகுண்டு தடுப்பு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் வில்லிவாகத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் நீண்ட ஆண்டுகளுக்கு முன்பாக பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அந்தப் பெண் தன்னுடைய கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அவரும் பாண்டியராஜும் காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. இதன்காரணமாக அடிக்கடி அந்த வீட்டிற்கு செல்லும் போது பாண்டியராஜ் அந்த பெண்ணின் 13 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தச் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. 

தற்போது அந்தச் சிறுமி வளர்ந்து கல்லூரி படித்து வருகிறார். அத்துடன் அவருக்கு வேறு ஒரு நபர் உடன் திருமணம் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. எனினும் பாண்டியராஜ் இப்போதும் அந்தப் பெண் தன்னுடைய தாய் வீட்டிற்கு செல்லும்போது பாலியல் தொந்தரவு அளித்துவந்ததாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணும் தாயும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

 

அந்தப் புகாரில் சிறு வயதில் பாண்டியராஜ் பல முறை அந்தப் பெண்ணை மிரட்டி பாலிய வன்கொடுமை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் பல ஆண்டுகளாக மிரட்டி வருவதும் தெரியவந்துள்ளது. இந்தப் புகாரை வைத்து காவல்துறையினர் அந்த காவலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் பாண்டியராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியாக இருக்கும் போது முதல் பெண் ஒருவருக்கு காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் பாலியல் தொந்தரவு செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாலியல் வன்கொடுமைக்கு இணங்காத சிறுமி! வாயில் ஆசிட் ஊற்றிய உறவினர்:

14 வயது சிறுமியை அவரது தாய் வழி மாமா பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதோடு, வாயில் ஆசிட் ஊற்றி கழுத்தை அறுத்து மிருகத்தனமாக நடந்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம்,  வேங்கடபுரம் கிராமத்தில் 9ஆம் வகுப்பு படிக்கும் இந்த 14 வயது சிறுமி நேற்று முன் தினம் (செப். 05) இரவு நேரத்தில் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சிறுமியின் தாய் வழி மாமா குடிபோதையில் வீட்டுக்குள் நுழைந்து அவரைத் தாக்க முயன்றுள்ளார்.

இதில் அதிர்ச்சியடைந்த சிறுமி தன்னை பாதுகாத்துக் கொள்ள கழிவறைக்குள் ஓடியுள்ளார். அப்போது சிறுமியைப் பின்தொடர்ந்து சென்று, அங்கு கழிவறையை சுத்தம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து அவரது வாய் மற்றும் முகத்தில் அந்நபர் ஊற்றியுள்ளார்.

தொடர்ந்து சிறுமி வலியால் கத்தத் தொடங்கியதும் சிறுமியின் கழுத்தை அறுத்து விட்டு அந்நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.


மேலும் படிக்க: பாலியல் வன்கொடுமைக்கு இணங்காத சிறுமி! வாயில் ஆசிட் ஊற்றி, கத்தியால் தொண்டையைக் கிழித்த உறவினர்!

தலைப்பு செய்திகள்

கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
மயிலாடுதுறையில் பரபரப்பு: 25 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது - முழு விவரம்!
மயிலாடுதுறையில் பரபரப்பு: 25 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது - முழு விவரம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Embed widget