காதலை ஏற்காத விரக்தி... காதலித்த பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பி டார்ச்சர்: தனியார் ஊழியர் கைது!
காதலை ஏற்காத விரக்தியில் காதலித்த பெண்ணுக்கு ஆபாசம் வீடியோ அனுப்பிய தனியார் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காதலை ஏற்காத விரக்தியில் காதலித்த பெண்ணுக்கு ஆபாசம் வீடியோ அனுப்பிய தனியார் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து பெண்ணின் தந்தை நேற்று முன்தினம் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில்,
மயிலாப்பூர் பகுதியில் 28 வயதான மகளுடன் வசித்து வருகிறேன். என் மகள் பெருங்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில செய்து வந்தார். இந்தநிலையில், சில நாட்களுக்கு முன் எனது மகள் எங்களிடம் எதுவும் கூறாமல் வேலையில் இருந்து விலகினார்.இது பற்றி மகளிடம் கேட்டபோது, அதே நிறுவனத்தில் வேலை செய்து வரும் பெரும்பாக்கம் முக்கம்பாளையம் சாலையை சேர்ந்த 41 வயதான அஸ்வின் விக்னேஷ் என்பவர், என் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், அவரது காதலை ஏற்காததால் அதிகளவில் நெருக்கடி கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, எனது பெண் வேலையில் இருந்து நின்று விட்ட காரணத்தினால் அஸ்வின் விக்னேஷ் எனது மக ளின் மின்னஞ்சல் முகவ ரியில் ஆபாச படங்களை அனுப்பி மிரட்டியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் எனது மனைவியின் வாட்ஸ்அப் எண்ணிற்கும் ஆபாச படங்களை அனுப்பி தொந்தரவு செய்தும் எங்கள் குடும்பத்தின் மனநிலையை கெடுகிறார். எனவே தவறான நோக்கத்தில் எனது மகள் மற்றும் மனைவிக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பி தொந்தரவு அஸ்வின் விக்னேஷை கைது செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க : 17 வயது சிறுமிக்கு 2 ஆண்டுகளில் 4 வது திருமணம்: கொடுமைக்கார தாய், சகோதரன் கைது!
இதுபற்றி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தியதில், புகார் அளித்தவரின் மகளை காதலிக்க வற்புறுத்தி அஸ்வின் விக்னேஷ் தொந்தரவு செய்ததும், ஆபாச படங்களை அனுப்பி மிரட்டியதும் தெரியவந்தது.
இதையடுத்து, அஸ்வின் விக்னேஷை நேற்று கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 2 செல்போன்களை பறிமுதல் செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
இந்திய-பாக்., எல்லையில் பிறந்த குழந்தை: ‛பார்டர்’ என பெயர் சூட்டிய பெற்றோர்!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்