மேலும் அறிய

Chennai News: தண்ணீர் பிடிக்க சென்ற இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவர்

சென்னையில் நடைபெற்ற குற்ற செய்திகளை கீழே காணலாம்

இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவர்

சென்னை கொளத்தூர் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் வசிக்கும் 25 வயது பெண்மணி ஒருவர் டிப்ளமோ படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் சுமார் 60 வயதுடைய ராமதாஸ் என்பவர் சுமார் 3 மாதத்திற்கு முன்பு அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார்.

பின்பு , அப்பெண் 08.09.2025 அன்று மாலை அவரது வீட்டின் அருகிலுள்ள தண்ணீர் குழாயில் தண்ணீர் பிடிக்க சென்ற போது , அதே ராமதாஸ் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு கட்டிப் பிடிக்க முயன்றுள்ளார். அப்பெண் சத்தம் போடவே, ராமதாஸ் வீட்டிற்குள் சென்று மறைந்து கொண்டதாகவும் , தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தவறாக நடக்க முயன்ற ராமதாஸ் மீது நடவடிக்கை எடுக்கும்படி பாதிக்கப்பட்ட அப்பெண் V-4 இராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டனர்.

V-4 இராஜமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து வழக்கில் சம்பந்தப்பட்ட ராமதாஸ் ( வயது 61 ) சென்னை என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராமதாஸ் விசாரணைக்குப் பின்னர் (13.09.2025) ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவு படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கஞ்சா மற்றும் பட்டா கத்தியுடன் சுற்றி திரிந்த நபர்கள் கைது.

சென்னை ஓட்டேரி பகுதியில் கஞ்சா மற்றும் கத்திகளை வைத்து கொண்டு சிலர் சுற்றி திரிவதாக , ஓட்டேரி காவல் நிலைய ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் , உதவி ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 07.09.2025 அன்று ஓட்டேரி டோபிகானா பகுதியில் கண்காணித்து அங்கு கஞ்சா மற்றும் பட்டா கத்தியுடன் இருந்த அருண் ( வயது 35 ) , நாகராஜ் ( வயது 40 )  ஆகிய 2 நபர்களை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 2.3 கிலோ கஞ்சா, 1 பட்டா கத்தி, பணம் ரூ.2,500 மற்றும் 1 எடை இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். விசாரணையில் தலைமறைவான வசந்தகமன் மற்றும் பால் பிரவீன் ஆகியோர் வடமாநிலம் சென்று கஞ்சாவை வாங்கி வந்து , சிலரிடம் கொடுத்து பாக்கெட்டுகளாக பிரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

P-2 ஓட்டேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, இவ்வழக்கில் தொடர்புடைய நரேந்திரன் ( வயது 33 ) இவரது தாயார் ஜான்சி ( வயது 57 ) அருண்குமார் ( வயது 19 ) , விமல்குமார் ( வயது 30 ) ஆகிய 4 நபர்களை (13.09.2025) கைது செய்தனர்.

விசாரணையில் விமல்குமார் P-2 ஓட்டேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் , இவர் மீது 3 - க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளும் , நரேந்திரன் மீது 4 கஞ்சா வழக்குகளும் , ஜான்சி மீது 3 கஞ்சா வழக்குகள் உட்பட 7 குற்ற வழக்குகளும் , அருண்குமார் மீது கஞ்சா ஆயுத சட்டம் , திருட்டு உட்பட 5 குற்ற வழக்குகளும் உள்ளது தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட நால்வரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவான நபர்களை காவல் குழுவினர் தேடி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

" மனைவியின் Whats app , instagram சாட் " அதிர்ந்து போன கணவன் !! ஏன் எதற்காக ?
சிறுவன் மீது லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்குதல்: சீர்காழி அருகே காவல் துறையினர் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தினர்!
சிறுவன் மீது லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்குதல்: சீர்காழி அருகே காவல் துறையினர் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தினர்!
மயிலாடுதுறையில் 32 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: மாவட்ட காவல் துறை அதிரடி நடவடிக்கை! 
மயிலாடுதுறையில் 32 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: மாவட்ட காவல் துறை அதிரடி நடவடிக்கை! 
" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget