மேலும் அறிய
Advertisement
மதுபோதையில் வாக்குவாதம்! லாரி ஏற்றிக் கொலை செய்த வடமாநில ஓட்டுநர்..! பதைபதைக்கும் சம்பவம்!
போதையில் இருந்த வாலிபர்களை லாரி ஏற்றிக் கொன்ற வடமாநில டிரைவரை காவல் துறையினர் கைது செய்தனர்
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் தனியாருக்கு சொந்தமாக கனரக வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளது. இங்கு அவ்வழியாக செல்லும் ஏராளமான கனரக வாகனங்கள் தங்களுடைய வாகனத்தை நிறுத்தி வைப்பது வழக்கம். அதேபோல இந்த பகுதியில் உள்ள லாரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் கனரக வாகனங்கள் இவ்விடத்தில் நிறுத்தி வைக்கப்படும்.
அப்பகுதியில் அதிக அளவு இருட்டாக இருக்கும் என்பதால் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் இளைஞர்கள் சிலர் அங்கு மது குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.இந்நிலையில் நேற்று அப்பகுதியில் வடபெரும்பாக்கம் விநாயகபுரத்தை சேர்ந்த கமலக்கண்ணன் (36), நவீன் (36), வடகரையை சேர்ந்த குமரன் (34) மற்றும் நண்பர்கள் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர்.
தகராறு
அப்போது அங்கிருந்த, தனது லாரியை எடுக்க வடமாநில லாரி டிரைவரும், கிளீனரும் வந்துள்ளனர். லாரியை எடுக்கப் போகிறேன் வழிவிடுங்கள் என்று டிரைவர் கூறியுள்ளார். இதனால், வடமாநில லாரி டிரைவருக்கும், போதையில் இருந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்கள் திடீரென கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாகலாரி டிரைவர் கண்ணையா லால் சிங் லாரியை திடீரென எடுத்துக் கொண்டு, போதையில் இருந்தவர்கள் மீது வேகமாக மோதினார்.
பலி..
இதில், கமலக்கண்ணன் உடல் நசுங்கி பலியானார். படுகாயமடைந்த நவீன், குமரன் ஆகியோர் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி குமரன் உயிரிழந்தார். இதனிடையே தகவல் அறிந்து அங்கு வந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் லாரி பார்க்கிங் யார்டில் நிறுத்தப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரிகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து செங்குன்றம் காவல் துறையினர் தப்பி ஓடிய வடமாநில லாரி டிரைவர், கிளீனரை தேடி வந்தனர். இந்நிலையில், லாரி டிரைவர் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த கண்ணையா லால் சிங், கிளீனர் கிரீஷ்குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion