Kanchipuram: ட்விட்டரில் சர்ச்சைக்குரிய பதிவு; பாஜக மாவட்ட செயலாளர் கைது - சைபர் கிரைம் அதிரடி
ட்விட்டரில் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டு இருந்த காஞ்சிபுரம் மாவட்ட பாஜக மாவட்ட செயலாளர் செல்வம் கைது. காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை .
இந்துக்களின் கோவில் உண்டியல் பணம் அரசுக்கு சொந்தம், இஸ்லாமிய மசூதிகளின் பணம் அவர்களுக்கு சொந்தமா? என ட்விட்டரில் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டு இருந்த காஞ்சிபுரம் மாவட்ட பாஜக மாவட்ட செயலாளர் செல்வத்தை கைது செய்து காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை சேர்ந்த செல்வம் பாஜகவில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் மற்றும் உத்திரமேரூர் தொகுதி பொறுப்பாளராக உள்ளார்.
இந்துக்களின் கோவில் உண்டியல் பணம் அரசுக்கு சொந்தம், இஸ்லாமிய மசூதிகளின் பணம் அவர்களுக்கு சொந்தமா, ஆண்டவா தமிழக தமிழ்நாட்டை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என சமூக வலைதளமான டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
செல்வம் ட்விட்டரில் பதிவு செய்திருந்த பதிவிற்கு மற்ற மதங்களைச் சார்ந்தவர்கள் அதற்கு பதில் அளிக்கும் வகையில் ஆக்ரோஷமான கருத்துக்களை பதிவிட்டிருந்தனர். இதனால் இரண்டு மதங்களை சார்ந்த மக்களிடையே பிரிவினையை உண்டாக்கி சமூக நல்லிணக்கத்திற்கு பொது அமைதிக்கும் சட்டம் ஒழுங்கு பாதிப்புக்கு போடும் வகையில் தனது ட்விட்டர் ட்விட்டர் கணக்கில் உண்மைக்கு புறம்பான தகவலை வீடியோவாக பரப்பிய செல்வம் மீது வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த முபாரக் பாஷா என்பவர் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து ட்விட்டர் கணக்கில் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டிருந்த செல்வத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் வகையில் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டு இருந்த பாஜக மாவட்ட செயலாளர் செல்வம் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்