மேலும் அறிய

திருமணமான 6 மாதத்தில் பிரிந்த மனைவி....கணவர் எடுத்த கொடூர முடிவால் அதிர்ச்சி

புருஷோத்தமன், மனைவி தன்னை விட்டு பிரிந்தது குறித்து கூறி வருத்தப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே பெரிய விஞ்சியம்பாக்கம் ஏரிக்கரை அமைந்துள்ளது. இங்கு இரவு நேரங்களில், இளைஞர்கள் மது குடிப்பது வழக்கம். இந்தநிலையில் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் உடல் ஏரிக்கரை ஓரம் இருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். அப்பகுதி மக்கள் இது குறித்து , காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் நடைபெற்ற இடம் மறைமலை நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால், தகவல் அறிந்து மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

திருமணமான 6 மாதத்தில் பிரிந்த மனைவி....கணவர் எடுத்த கொடூர முடிவால் அதிர்ச்சி
 
மறைமலைநகர் உதவி ஆய்வாளர் தினேஷ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு, உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். கைப்பற்றப்பட்ட உடலில் எந்தவித காயங்களும் இல்லாததால், தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும், அதே போன்று உடல் அருகே மதுபாட்டில் சோடா உள்ளிட்டவரை இருந்ததால், மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் உயிரிழந்தவர் யார் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
 
மறைமலைநகர் போலீசார் நடத்திய விசாரணையில்,  சிங்கப்பெருமாள் கோவில் குப்பைகாரி அம்மன் கோவில் தெரு பகுதியை சார்ந்த சுந்தரமூர்த்தி என்பவரின் மகன் புருஷோத் ( 28 ) என்பதும் இவர் மகேந்திரா சிட்டி பகுதியில், ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. மேலும் புருஷோத்திற்கு செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் அடுத்த வளையக்கரணை , பகுதியை சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவருடன் கடந்த 6 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடைபெற்று உள்ளது. இவர்கள் இருவரும், 6 மாதமாக சிங்கப்பெருமாள் கோவிலில் வசித்து வந்துள்ளனர். கணவன் மனைவி இருவரும் அடிக்கடி சண்டையிட்டும் வந்துள்ளனர்.
maraimalai nagar police station , மறைமலைநகர் காவல் நிலையம்
 
இந்தநிலையில், கணவன், மனைவி இருவரும் வழக்கம் போல கடந்த சனிக்கிழமை அன்று சண்டையிட்டுள்ளனர். இதனால் கோபம் அடைந்த மனைவி பாக்கியலட்சுமி, தனது அம்மா வீட்டிற்கு கோபித்துக் கொண்டு சென்றுள்ளார். மனைவி சென்றதிலிருந்து கணவன் புருஷோத்தமன் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் நேற்று நள்ளிரவு 11:45 மணி அளவில் மனைவியின் சித்தப்பா மகன் அருண் என்பவருக்கு போன் செய்த புருஷோத்தமன், மனைவி தன்னை விட்டு பிரிந்தது குறித்து கூறி வருத்தப்பட்டுள்ளார். இந்தநிலையில் தான் புருஷோத் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மனைவி பிரிந்த சோகத்தில் கணவன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து, இது குறித்து மறைமலை நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 6 மாதத்திலேயே கணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Suicidal Trigger Warning

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Sabarimala Temple: ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
Breaking News LIVE: சிசிடிவி காட்சிகளை வெளியிட மறுப்பது ஏன்? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
Breaking News LIVE: சிசிடிவி காட்சிகளை வெளியிட மறுப்பது ஏன்? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
TN GOVT Election: என்னாது..!  உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN GOVT Election: என்னாது..! உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
விசாரணைக்கு வந்த ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து  வழக்கு...என்ன சொன்னாங்க
விசாரணைக்கு வந்த ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து வழக்கு...என்ன சொன்னாங்க
Embed widget