மேலும் அறிய

கணவன் வேண்டாம்.. பழைய காதலனே போதும்.. மகளுடன், மாயமான பெண் தற்கொலை

கணவனை விட்டு பிரிந்து பழைய காதலுடன் வாழ்ந்துவந்த பெண் தூக்கிட்டு தற்கொலை.

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது ஒரே மகள் பவித்ரா (25).  இவர் பொத்தேரி பகுதியில் தமிழ்வாணன் என்பவரை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் பவித்ராவின் குடும்பத்தாருக்கு தெரிய வர  பவித்ராவிடம் எடுத்துக்கூறி கண்டித்துள்ளனர். அதையும் மீறி தனது காதலை தொடர்ந்துள்ளார். நாளடைவில் தமிழ்வாணனுக்கும் பவித்ராவிற்கும் இடையே உரசல் ஏற்பட்டு காதல் பாதியிலேயே முறிந்ததாக கூறப்படுகிறது.

பழைய  காதலன் தமிழ்வாணன் 

இந்த நிலையில் பவித்ராவின் பெற்றோர் சென்னை வண்ணாரப் பேட்டையில் உள்ள தனது சகோதரியின் மகன்  புருஷோத்தமனுக்கும் பவித்ராவிற்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்தை முறையாக பதிவும் செய்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் வண்ணாரப் பேட்டையில் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளனர். இருவருக்கும் 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. நன்றாக சென்று கொண்டிருந்த பவித்ராவின் வாழ்க்கையில் பழைய  காதலன் தமிழ்வாணன் மீண்டும் வந்துள்ளார். பவித்ரா தமிழ்வாணன் காதல் தொடர்ந்துள்ளது.

அடிக்கடி தமிழ்வாணனுடன் பேசுவதும் அவரை ரகசியமாகவும் சந்தித்து வந்துள்ளார். இந்த விவகாரம் பவித்ராவின் கணவர் புருஷோத்தமனுக்கு தெரியவந்தது. இதுகுறித்து பவித்ராவிடம் எடுத்து சொல்லி அவரோடு வாழ விரும்பியுள்ளார். அதையும் மீறி பழைய காதலுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மூன்று மாதம் முன்பு புருஷோத்தமன் குடும்பத்தினர் திருவிழாவிற்கு சென்றுள்ளனர். பவித்ராவை திருவிழாவிற்கு அழைத்தும் அவர்களுடன் செல்லாமல் வீட்டிலேயே தங்கிவிட்டார். கணவரின் குடும்பம் திருவிழாவிற்கு சென்ற அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட பவித்ரா வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தனது குழந்தையுடன் அங்கிருந்து புறப்பட்டு பொத்தேரியில் தனது பழைய காதலன் தமிழ்வாணனுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

மூன்று மாதத்தில் தினமும் சண்டை

பவித்ரா தமிழ்வாணனோடு மூன்று மாதத்தில் தினமும் சண்டை சச்சரவில்தான் வாழ்ந்து வந்துள்ளனர். முதலில் பொத்தேரியில் இரண்டு மாதங்கள் வசித்து வந்த நிலையில் திடீரென இடத்தை மாற்றி தைலாவரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் ஒரு வீட்டில் வாடகைக்கு, வந்து 2 வாரங்களில் மீண்டும் பிரச்சினை வலுத்து ஏற்கனவே பவித்ரா கொண்டு வந்த நகையை வாங்கி காலி பண்ணிவிட்டு, தொழில் செய்வதற்கு உன் அப்பாவிடம் இருந்து 10 லட்சரூபாய் வாங்கித்தர சொல்லி தினமும் பவித்ராவை அடித்து தொந்தரவு செய்துள்ளார்.

அப்பாவிடம் 10 லட்ச ரூபாய் பணம் 

இதற்கிடையில் பவித்ரா அவரது அப்பாவிடம் 10 லட்ச ரூபாய் பணம் கேட்டுள்ளார். அவரது அப்பா பணம் தர மறுத்து விட்டார். ஒருகட்டத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பவித்ரா தனது அப்பாவிடம்  விரைவில் குழந்தையுடன் நான் உங்களோடு வந்து விடுகிறேன் என போனில் பேசியுள்ளார். திடீரென பவித்ரா  குழந்தையை எதிர் வீட்டில் விட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து,  இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Suicidal Trigger Warning.

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pushpa 2 Tragedy: காவு வாங்கிய புஷ்பா! தியேட்டரிலே பறிபோன தாயின் உயிர்! ஐ.சி.யூ.வில் 9 வயது மகன்
Pushpa 2 Tragedy: காவு வாங்கிய புஷ்பா! தியேட்டரிலே பறிபோன தாயின் உயிர்! ஐ.சி.யூ.வில் 9 வயது மகன்
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
Breaking News LIVE 5th Dec 2024: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE 5th Dec 2024: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Govt Teacher Sexual Assault : மாணவிகளிடம் அத்துமீறிய அரசு பள்ளி ஆசிரியர்! செருப்பால் அடித்த பெற்றோர்கள்Aadhav Arjuna: ”ஒன்றிய அரசையே சொல்லாதீங்க!” திமுக-வை விளாசும் ஆதவ்! விசிகவில் வெடிக்கும் கலகம்Police Angry: ஜெய் பீம் பாணியில் மிரட்டல்! விழுப்புரம் போலீஸ் அடாவடி.. சூடான இளைஞர்கள்!Sukhbir Singh Badal: EX Deputy CM  மீது துப்பாக்கிச்சூடு! பயங்காவாதி தொடர்பா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pushpa 2 Tragedy: காவு வாங்கிய புஷ்பா! தியேட்டரிலே பறிபோன தாயின் உயிர்! ஐ.சி.யூ.வில் 9 வயது மகன்
Pushpa 2 Tragedy: காவு வாங்கிய புஷ்பா! தியேட்டரிலே பறிபோன தாயின் உயிர்! ஐ.சி.யூ.வில் 9 வயது மகன்
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
Breaking News LIVE 5th Dec 2024: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE 5th Dec 2024: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
'திருட்டு கேஸ்ல உள்ளே தள்ளிடுவேன்' பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய எஸ்.ஐ? பெற்றோர்கள் கண்ணீர்
'திருட்டு கேஸ்ல உள்ளே தள்ளிடுவேன்' பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய எஸ்.ஐ? பெற்றோர்கள் கண்ணீர்
Rasipalan December 05: கடகத்திற்கு பாசமழை; சிம்மத்திற்கு நட்பு - அப்போ உங்க ராசிக்கு?
Rasipalan December 05: கடகத்திற்கு பாசமழை; சிம்மத்திற்கு நட்பு - அப்போ உங்க ராசிக்கு?
உஷார்! செல்லூர் ராஜூவின் உதவியாளர்? அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.26 லட்சம் மோசடி?
உஷார்! செல்லூர் ராஜூவின் உதவியாளர்? அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.26 லட்சம் மோசடி?
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
Embed widget