சென்னையில் காவலரை தள்ளி விட்டு சண்டை போட்ட ரவுடி கைது
சென்னையில் போக்குவரத்து காவலரை பணி செய்ய விடாமல் தடுத்து , தாக்கிய சரித்திர பதிவேடு ரவுடி கைது.
வேகமாக வந்த ஆட்டோ
சென்னை பெரம்பூர் போக்குவரத்து பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் மாமல்லன் (58). இவர் காலை 10 மணி அளவில் அகரம் சந்திப்பில் பணியில் இருந்த போது ஆட்டோ ஒன்று வேகமாக வந்து உள்ளது.
நிற்காமல் சென்ற ஆட்டோ
அப்போது ஆட்டோவின் முன்னாள் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது ஆட்டோ மோதி நிற்காமல் சென்றது. உடனடியாக அப்பகுதியில் போக்குவரத்து பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மாமல்லன் உள்ளிட்ட போலீசார் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
போலீசாரை தள்ளி விட்டு வாக்கு வாதம்
மேலும் தங்களது இருசக்கர வாகனத்தில் ஆட்டோவை துரத்திச் சென்று பிடித்தனர். அப்போது ஆட்டோவில் இருந்த இருவரும் முழு குடிபோதையில் போக்குவரத்து போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர்.
மேலும் சிறப்பு உதவி ஆய்வாளர் மாமல்லனை கீழே தள்ளி உள்ளனர். இதனையடுத்து உடனடியாக போக்குவரத்து போலீசார் திரு.வி.க நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
6 குற்ற வழக்குகள் - சரித்திர பதிவு ரவுடி
திரு.வி.க நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆட்டோவில் இருந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் பெரம்பூர் எஸ். எஸ்.வி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த அப்பு என்கின்ற அமர்நாத் வயது ( 29 ) என்பது தெரிய வந்தது.
இதில் அமர்நாத் மீது ஏற்கனவே ஆறு குற்ற வழக்குகள் உள்ளன. அவர் சரித்திர பதிவேடு ரவுடியாகவும் உள்ளார் என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து அப்பு என்கின்ற அமர்நாத் மீது வழக்கு பதிவு செய்த திருவிக நகர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். போக்குவரத்து போலீசை தள்ளி விடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.