காசு கேட்டா கத்திரிக்கோல் வச்சு குத்துவேன்... சலூன் கடைக்காரரை சம்பவம் செய்த ‛குடி’மகன்!
காவல்துறை அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கபாலி மதுபோதையில் சலூன் கடை உரிமையாளர் ரவியை கத்திரிக்கோலால் குத்தியது தெரியவந்தது.
சென்னை திரு. வி.க.நகர் வாசுதேவன் முதல் தெருவை சேர்ந்தவர் 25 வயதான ரவி. இவர் அதே பகுதி தீட்டித்தோட்டம் 1வது தெருவில் சலூன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் மாலை இவரது கடைக்கு வந்த கபாலி என்ற நபர் முடி வெட்டிக்கொண்டார்.
முடி வெட்டிய பிறகு ரவி காபலியிடம் குறிப்பிட்ட பணம் வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதற்கு பணம் கொடுக்காமல் கபாலி புறப்பட முயன்றபோது, ரவி அவரை தடுத்து நிறுத்தி, பணம் தரும்படி வற்புறுத்தியுள்ளார். அப்போது அவர், ‘நான் யார் தெரியுமா... என்னிடமே பணம் கேட்கிறாயா...' என மிரட்டல் விடுத்துள்ளார்.மேலும் படிக்க : திருமணமானதை மறைத்து காதலித்த பெண்...காதலன் பிரிந்ததால் தற்கொலைக்கு முயற்சி!
இதனால், இருவருக்கும் சிறிது நேரம் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த தகராறு நீடிக்கவே, அப்போது கபாலி கடையில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து ரவியை குத்தியுள்ளார். இதில் காயமடைந்த ரவி ரத்த வெள்ளத்தில் துடிக்க அக்கம் பக்கத்தினர் மீட்டு, பெரியார் நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து, ரவி கொடுத்த புகாரின்பேரில் திரு.வி.க.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கத்திரிக்கோலால் குத்திய பெரம்பூர் கண்ணபிரான் கோயில் தெருவை சேர்ந்த ஸ்ரீதர் (எ) கபாலியை (22) கைது செய்தனர்.
Petrol, Diesel Price: 34 வது நாளாக ஒரே விலை.. இன்றும் மாற்றமில்லா பெட்ரோல், டீசல் விலை!
காவல்துறை அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கபாலி மதுபோதையில் சலூன் கடை உரிமையாளர் ரவியை கத்திரிக்கோலால் குத்தியது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட கபாலியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.சமீப காலமாகவே இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Watch Video: ஆஷஸ் டெஸ்ட் தொடங்கியதும் சாதனை... 85 ஆண்டுகளுக்குப் பின் முதல் பந்தில் விக்கெட்!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்