மேலும் அறிய

1 கோடிக்கும் மேல் மோசடி அழைப்புகள் முடக்கம்! ஆன்லைன் குற்றங்களில் சிக்காமல் இருக்க எச்சரிக்கை

கம்போடியா, லாவோஸ் , மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து, 'ஆன்லைன்' வாயிலாக பண மோசடி செய்ய முயற்சித்த , ஒரு கோடிக்கும் மேற்பட்ட மொபைல் போன் அழைப்புகளை போலீசார் தடுத்துள்ளனர்.

1 கோடிக்கும் மேல் அழைப்புகள் நிறுத்தம்
 
ஆன்லைன் பண மோசடி ஒரு சைபர் க்ரைம் வகையைச் சேர்ந்தது. இணையத்தைப் பயன்படுத்தி செய்யப்படும் மோசடிகள் அனைத்தும் சட்டப்படி குற்றமாகும். குறிப்பாக பணத்தை ஏமாற்றிப் பறிக்கும் நோக்குடன் செய்யப்படும் ஆன்லைன் மோசடிகள் சைபர் க்ரைம் சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனைக்குரிய குற்றங்களாகும். இது போன்ற அழைப்புகள் கம்போடியா , லாவோஸ் , மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 'ஆன்லைன்' வாயிலாக பண மோசடி செய்ய முயற்சித்த , ஒரு கோடிக்கும் மேற்பட்ட மொபைல் போன் அழைப்புகளை போலீசார் தடுத்துள்ளனர்.
இதுகுறித்து சைபர் குற்றப் பிரிவு போலீஸார் கூறியதாவது ;

அடிப்படை கணினி அறிவு , தட்டச்சு, ஆங்கில மொழி தெரிந்த இளைஞர்களை குறிவைத்து , சமூக வலைதளம் வாயிலாக இடைத்தரகர்களும், சட்ட விரோதமாக ஆள் சேர்க்கும் நிறுவனங்களும் , வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக விளம்பரம் செய்கின்றன. அவ்வாறு வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படும் நபர்கள் , மியான்மர், லாவோஸ், கம்போடியா உள்ளிட்ட நாடுகளில், 'ஆன்லைன்' வாயிலாக பண மோசடி செய்யும், 'சைபர்' அடிமைகளாக மாற்றப்படுகின்றனர்.

இத்தகைய ஆள் கடத்தலை தீவிரமாக தடுத்து வருகிறோம். எங்களிடம் ஆன்லைன் வாயிலாக பண மோசடி செய்து கைதான நபர்கள் மற்றும் அவர்களின் கூட்டாளிகளின் மொபைல் போன் எண்கள் உள்ளன. மேலும் லாவோஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்துள்ள அழைப்புகள் குறித்த விபரங்களையும், மொபைல் போன் எண்களின் தரவுகளை பெற்று மத்திய தொலைத் தொடர்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து உள்ளோம். அவர்கள் வாயிலாக கடந்த ஏழு மாதங்களாக வெளி நாடுகளில் இருந்து ஆன்லைன் வாயிலாக பண மோசடிக்கு முயற்சி செய்து வந்த ஒரு கோடிக்கும் மேற்பட்ட மொபைல் போன் அழைப்புகள் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக தடுக்கப்பட்டுள்ளன. மேலும் பண மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 7,000க்கும் மேற்பட்ட 'சிம் கார்டு'களையும் முடக்கி உள்ளோம் என கூறினார்.

1930 - க்கு 'டயல்' செய்யுங்கள்

சைபர் குற்றவாளிகள் பகுதி நேர வேலை வாய்ப்பு பங்கு சந்தை முதலீடு என, பல்வேறு விதமாக மக்களை ஏமாற்றி பணம் பறித்து வருகின்றனர். ஆன்லைன் வாயிலாக நடக்கும் , இத்தகையை குற்றங்கள் குறித்து புகார் அளிக்க , பொதுமக்கள் கட்டணமில்லா உதவி எண்ணான 1930 - ஐ தொடர்பு கொள்ளலாம். இது தவிர www. cybercrime.gov.inஎன்ற இணையதளம் வாயிலாகவும் புகார் அளிக்கலாம் என, சைபர் குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Embed widget