மேலும் அறிய

Crime : சொத்து தகராறு ஒருபுறம், பாலியல் சீண்டல் மறுபுறம்... கூலிப்படை வைத்து தந்தையை மகனே தீர்த்துக்கட்டிய கொடூரம்.

கூடுவாஞ்சேரி அருகே கன்னிவாக்கத்தில் சொத்தில் பங்கு கொடுக்காத தந்தை சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தலைமறைவான மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பெருமட்டுநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட கன்னிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் உமாபதி (65). இவர் அதே பகுதியில் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவருக்கு மகள் லோகேஸ்வரி (37), மகன் சரவணன் (35) ஆகியோர் உள்ளனர். இதில் உமாபதியின் மனைவி கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இறந்துவிட்டார். மேலும் திருமணமான மகள் லோகேஸ்வரிக்கு இரண்டு குழந்தைகளும், சரவணனுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். மேலும் லோகேஸ்வரியின் முதல் கணவர் இறந்துவிட்டார். இதனையடுத்து அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இதில், உமாபதிக்கு சொந்தமாக கன்னிவாக்கத்தில் ஒரு வீடும் ,காயரம்பேடு பகுதியில் ஒரு வீடும் உள்ளன. 


Crime : சொத்து தகராறு ஒருபுறம், பாலியல் சீண்டல் மறுபுறம்... கூலிப்படை வைத்து தந்தையை மகனே தீர்த்துக்கட்டிய கொடூரம்.
அதில் ஒரு வீட்டை சரவணனுக்கும், மற்றொரு வீட்டை  லோகேஸ்வரிக்கு பிறந்த மகன் பரமேஸ்வரனுக்கும்,உமாபதி எழுதி வைத்துவிட்டார். இதில் இரண்டு வீட்டையும் தனது பெயருக்கு எழுதி வைக்கும்படி சரவணன் கடந்த ஒரு ஆண்டாக தந்தையிடம் சண்டை போட்டு வந்துள்ளார். ஆனால் அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் உமாபதி புகார் அளித்து அது தொடர்பாக சரவணன் மற்றும் அவருடைய மனைவி உமா மகேஸ்வரி ஆகியோர் மீது கடந்த வருடம் ஏப்ரல் மாதம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். 

Crime : சொத்து தகராறு ஒருபுறம், பாலியல் சீண்டல் மறுபுறம்... கூலிப்படை வைத்து தந்தையை மகனே தீர்த்துக்கட்டிய கொடூரம்.
இந்நிலையில், இன்று காலை 9:30 மணியளவில் உமாபதி தனது பைக்கில் காயரம்பேடு பகுதியில் இருந்து கன்னிவாக்கம் பகுதிக்கு வழக்கம்போல் எலக்ட்ரிசியன் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை நோட்டமிட்ட மர்ம கும்பல்  கன்னிவாக்கம் அரசு பள்ளி அருகில் உமாபதியை சரமாக வெட்டி சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே  துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உமாபதியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Crime : சொத்து தகராறு ஒருபுறம், பாலியல் சீண்டல் மறுபுறம்... கூலிப்படை வைத்து தந்தையை மகனே தீர்த்துக்கட்டிய கொடூரம்.
இது குறித்து காவல்துறையினரிடம் விசாரித்தபோது, தந்தை மற்றும் மகன் ஆகிய இருவருக்கும் சொத்து விஷயத்தில் பிரச்சினை இருந்து வந்துள்ளது. அதேபோல சரவணனின் மனைவியான உமா மகேஸ்வரியிடம் உமாபதி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. சொத்துக்காக கொலை நடந்ததா அல்லது பாலியல் சீண்டல் காரணமாக கொலை நடந்ததா என விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.பேராசை பிடித்த மகன் சொத்துக்காக தன் தந்தையை கூலிப்படை வைத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget