Crime: பட்டப்பகலில் வெட்டவெளியில் உல்லாசதுக்கு அழைப்பு.. சர்ச்சையில் சிக்கிய தனியார் விடுதி.. என்ன நடந்தது?
சென்னையை அடுத்த கிண்டியில் தனியார் விடுதி ஒன்றில் வெளிப்படையாக பட்டப்பகலில் பாலியலுக்கு அழைப்பு விடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த கிண்டியில் தனியார் விடுதி ஒன்றில் வெளிப்படையாக பட்டப்பகலில் பாலியலுக்கு அழைப்பு விடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த கிண்டியில் தனியார் விடுதி ஒன்றில் வெளியே விளம்பர பேனர் வைக்கப்பட்டு இருந்தது. அந்த எலட்ரிக்கல் பேனரில், ‘ எடுத்து கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான பெண்களை 1000 ரூபாய்க்கு’ என்று திரையில் ஓடவிடப்பட்டு இருந்தது.
இதை அந்த வழியாக சென்ற ஒரு நபர் தனது செல்போன் மூலம் வீடியோவாக எடுத்து இணையதளத்தில் பதிவிட்டார். இதையடுத்து போலீசார் அந்த தனியார் விடுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், இந்த விளம்பர பலகையில், உணவு வகைகள் மட்டுமே விளம்பரம் செய்யப்படும் என்றும், இந்த சர்ச்சைக்குரிய விளம்பரம் எப்படி வெளியானது என்பது தெரியவில்லை என்றும் அந்த தனியார் ஹோட்டல் விடுதி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
என்ன நடக்கிறது சென்னையில்? சின்னமலை மெட்ரோ ரயில் நிலையம் அருகில்!! pic.twitter.com/H3MMLIV4js
— Gangadharan.K (@Gangatharanvks) December 24, 2022
ஆனாலும் இந்த ஓட்டலில் ஏற்கனவே பாலியல் தொழில் நடந்துள்ளதா அல்லது ஹோட்டல் நிர்வாகத்தின் மேல் இருக்கும் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக யாரேனும் செய்துள்ளார்களா என போலீசார் பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே சர்ச்சைக்குரிய விளம்பர பலகையை சம்பந்தப்பட்ட ஹோட்டல் ஊழியர்கள் அகற்றினர். இது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.
ஆன்லைன் ஆப்கள்:
ஆன்லைன் டேட்டிங் ஆப், வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் பாலியல் தொழிலை சிலர் ரகசியமாக நடத்தி வருகின்றனர். இப்படி ஆன்லைன் மூலம் பாலியல் தொழிலில் ஈடுபடும் நபர்கள், கூட்ட நெரிசல் இல்லாத பகுதிகளில் தனிவீடுகளை வாடகைக்கு எடுத்தோ அல்லது தங்கும் விடுதிகளை ஒரு நாள் வாடகைக்கு எடுத்தோ தொழில் நடத்துகின்றனர். குறிப்பாக, ஆன்லைன் ஆப்கள் மூலம் அறைகளை பதிவு செய்து, சந்தேகம் எழாத படி இந்த தொழில் நடக் கிறது. அவர்கள் பயன்படுத்தும் வாட்ஸ் அப் குழுவில், அவர்கள் எதிர்பார்க்கும் குறியீட்டை அனுப்பினால், பெண்களின் புகைப்படங்கள், எடுத்துக்கொள்ளும், நேரத்திற்கான பணம், வர வேண்டிய இடத்திற்கான விவரம் ஆகியவை அனுப்பப்படுகிறது. இந்த தொழிலுக்காக வெளிமாநில பெண்கள், தமிழ் பெண்கள், மாடல் அழகிகள் என பலர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.