மேலும் அறிய

சென்னை: காப்பாத்துங்க!! நடுரோட்டில் அலறியபடி ஓடிய ரவுடி.. துரத்தி துரத்தி வெட்டிய கும்பல்!

சென்னை அருகே பிரபல ரவுடி நடுரோட்டில் ஓட ஓட வெட்டிக்கொலை செய்த சம்பவம் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அடுத்த அயப்பாக்கத்தில் பிரபல ரவுடி நடுரோட்டில் ஓட ஓட வெட்டிக்கொலை செய்த சம்பவம் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்தவர் 30 வயதான பிரபல ரவுடி சந்தீப்குமார். இவர் மீது அண்ணாநகர் காவல் நிலையத்தில் கொலை, அடிதடி உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இவர், நேற்று மாலை 4.30 மணி அளவில் அண்ணாநகர், மடுவாங்கரை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு ஆட்டோ ஓட்டியபடி வந்தார். அங்கு, உறவினர்களிடம் பொதுவாக பேசிவிட்டு தனது வீட்டிற்கு கிளம்பியுள்ளார். 

அப்போது இவரை பின்தொடர்ந்து வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் இவரை வழிமறித்து அரிவாள், பட்டாக்கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்ட முயன்றது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், பொதுமக்களிடம் தன்னை யாராவது காப்பாற்றுங்கள் என்று அலறி கூச்சலிட்டு நடுரோட்டில் ஓடியுள்ளார். ஆனால், அவ்வளவு கூச்சலிட்டும் யாரும் உதவிக்கு வராததால் அந்த மர்ம கும்பல் அவரை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது.

அதில், படுகாயமடைந்த சந்தீப் குமார் ரத்தவெள்ளத்தில் மயங்கி சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர், அங்கிருந்து அந்த மர்ம கும்பல் இதைப் பார்த்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு, அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். 

தகவலறிந்த அண்ணாநகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சந்தீப் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில், கடந்த 2018ம் ஆண்டு ரவுடி ஆதித்யா என்பவரை அண்ணாநகரில் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தீப்குமார் சிறையில் இருந்து வெளியே வந்து ஆட்டோ ஒட்டிவந்ததும், நேற்று இந்த கொலை நடந்ததாகவும் தெரியவந்தது.

இந்த வழக்கு சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு மடுவாங்கரையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று சாப்பிட்டுவிட்டு, நண்பர்களுடன் பேசிவிட்டு, தனது வீட்டிற்கு செல்லும்போது படுகொலை செய்யப்பட்டது. 

கொலைக்கான காரணம் :

மேலும் நண்பர்களுடன் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டதாகவும், அதனால், அங்கிருந்து கிளம்பியதாகவும் கூறப்படுகிறது. எனவே, ஆதித்யாவை கொலை செய்ததற்கு பழிவாங்கும் விதமாக இந்த கொலை நடந்ததா, நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வந்து நண்பர்களுடன் மது அருந்தும் போது ஏற்பட்ட மோதல் காரணமாக கொலை நடந்ததா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற பல கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும், தப்பியோடிய மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

 

தலைப்பு செய்திகள்

Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget