Crime : பணியிலிருந்த பெண்ணுக்கு முத்தம் கொடுத்த மேலாளர்.. தூக்கிய காவல்துறை.. சென்னையில் பரபரப்பு
வாகன ஷோரூமில் பணிபுரிந்து வந்த பெண்ணுக்கு உதட்டில் முத்தம் கொடுத்த மேலாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெண்களுக்கு தங்களுடைய பணியிடங்களில் ஒரு சில நேரங்களில் சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. அந்தவகையில் தற்போது ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. சென்னையில் பணியிடத்தில் இருந்த பெண் ஒருவரிடம் மேலாளர் தவறாக நடந்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணாநகரில் ஒரு தனியார் வாகன ஷோ ரூம் செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் பணியாற்றி வந்துள்ளார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதன்படி அவர் பணியாற்றி வரும் அந்தக் கடையில் மேலாளர் ஒருவர் தவறாக நடந்து கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.
அதாவது அந்தக் கடையின் மேலாளர் அப்பெண்ணிடம் அடிக்கடி ஆபாசமாக பேசி வந்துள்ளார். அத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் அப்பெண்ணின் உதட்டில் முத்தம் கொடுத்துள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் முத்தம் கொடுத்தது தொடர்பாக வெளியே கூறினால் அப்பெண்ணை வேலையிலிருந்து நீக்குவதுடன் கொலை செய்துவிடுவதாகவும் மேலாளர் மிரட்டியுள்ளதாக தெரிகிறது.
மேலும் படிக்க:தேனி : பணியிட மாற்றம் செய்ததால் ஆத்திரம்.. ஓட ஓட விரட்டி வெட்டப்பட்ட பெண் அலுவலர்..
இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளான அந்த இளம் பெண் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் இளம் பெண்ணிடம் மேலாளர் தவறாக நடந்து கொண்டு உறுதியானது. இதைத் தொடர்ந்து அயனாவரும் பகுதியில் வசித்து வரும் மேலாளர் ராஜாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அத்துடன் அவர் வேறு பெண்கள் யாரிடமாவது இப்படி நடந்து கொண்டுள்ளாரா என்பது தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். பணி இடத்தில் இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணி இடங்களுக்கு பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இருக்க வேண்டும் என்பதை அந்த நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்