மேலும் அறிய
Advertisement
திருமணத்தை மீறிய உறவு...கர்ப்பிணியை கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை - செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
"உன் வயிற்றில் வளரும் கருவை கலைத்து விட்டு, சொந்த ஊருக்கு போய்விடு' எனக் கூறி உள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த ரம்யா, வேல்முருகனுக்கு இத்தக
திருமணத்தை மீறிய உறவு
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் காவல் நிலையத்தில், உதவி சிறப்பு காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் வேல்முருகன் (50) . இவர் கடந்த, 2011ம் ஆண்டு உத்திரமேரூரில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். அப்போது உத்திரமேரூர் அடுத்த வேடப்பாளையம் கிராமத்தை சேர்ந்த, வெங்கடாசலபதியின் மகள் ரம்யா (20) என்பவருக்கும், வேல்முருகனுக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டது. இருவரும் அவ்வப்போது தனிமையில் இருந்து வந்தனர். வேல்முருகன் மாறுதலாகி ஒரகடம் காவல் நிலையத்திற்கு சென்ற பின்பும், இவர்களது தொடர்பு நீடித்தது.
ரம்யாவை தீர்த்து கட்ட முடிவு
கடந்த 2013 ஆம் ஆண்டு, வேல்முருகன் காஞ்சிபுரம் நாகலூத்து தெருவில் உள்ள, ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, ரம்யாவுடன் குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில், ரம்யா கர்ப்பமடைந்தார். இத்தகவல் வேல்முருகனின் குடும்பத்திற்கு தெரிய வந்தது. 50 வயதில் தந்தை, திருமணத்தை மீறிய தொடர்பால் குழந்தையை பெற்று எடுத்தால், குடும்பத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டு விடும் என நினைத்த, வேல்முருகனின் மகன் ரஞ்சித்குமார் ரம்யாவை தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி, ரம்யா வசித்து வந்த, வீட்டிற்கு ரஞ்சித்குமார் சென்றுள்ளார்.
"உன் வயிற்றில் வளரும் கருவை கலைத்து விட்டு, சொந்த ஊருக்கு போய்விடு' எனக் கூறி உள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த ரம்யா, வேல்முருகனுக்கு இத்தகவலை, அலைபேசி மூலம் தெரிவிக்க முயன்றார். இதனால், ஆத்திரமடைந்த, ரஞ்சித்குமார், தன் முதுகில் மறைத்து வைத்திருந்த கத்தியால், ரம்யாவை சரமாரியாக வெட்டினார். இதில், ரம்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, ரஞ்சித் குமார் கைது செய்யப்பட்டு இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்து சிவகாஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கானது செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி, விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து குற்றவாளி ரஞ்சித் குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அபராதம் கட்ட தவறினால், மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்படும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
அரசியல்
தமிழ்நாடு
விளையாட்டு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion