மேலும் அறிய

Crime | சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. டாக்டர் செய்த கொடூரம்..வழக்குப்பதிந்து நடவடிக்கை..

மருத்துவம் பார்க்க வந்த பெண்ணை மருத்துவர் ஒருவர் பாலியல் சீண்டல் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலங்களாக பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டு தான் இருக்கின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இம்முறை மருத்துவம் பார்க்கும் மருத்துவர் ஒருவர் பெண்ணிற்கு பாலியல் ரீதியாக சீண்டல் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய டெல்லி பகுதியில் ஒரு சிறிய தனியார் மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. அந்த மருத்துவமனையில் கடந்த 27ஆம் தேதி பெண் ஒருவர் கால் வலி தொடர்பாக மருத்துவம் பார்க்க தனியாக சென்றுள்ளதாக தெரிகிறது. அப்போது அங்கு இருந்த மருத்துவர் அப்பெண் தனியாக வந்திருப்பதை அறிந்து கொண்டு தவறாக நடக்க முயற்சி செய்ததாக தெரிகிறது.. அத்துடன் அவருடைய உடம்பை சோதனை செய்வது போல் பாலியல் ரீதியில் சீண்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பெண் மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடியுள்ளார். 

மேலும் படிக்க: வீட்டை விட்டு வெளியேறிய மாமனார்! மனைவியை அடித்தே கொன்றுவிட்டு தற்கொலை நாடகமாடிய கணவன் கைது..!

அந்தப் பெண் தன்னுடைய கணவரிடம் நடந்த விஷயத்தை கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அப்பெண்ணி கணவர் டெல்லி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவரை கைது செய்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் உறுதியுள்ளார். 

Crime | சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. டாக்டர் செய்த கொடூரம்..வழக்குப்பதிந்து நடவடிக்கை..

கடந்த சில நாட்களுக்கு முன்பாக டெல்லிக்கு அருகே உள்ள குருகிராம் பகுதியில் போலி மருத்துவர் ஒருவர் பெண்ணிற்கு கருகலைப்பு செய்த போது பிடிப்பட்டார். அவர் உண்மையில் ஒரு டிகிரி கூட படிக்கவில்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவர் பல மாதங்கள் அப்பகுதியில் தன்னை மருத்துவர் என்று கூறிக் கொண்டு சிகிச்சை அளித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுபோன்று பலரும் போலியாக மருத்துவர் என்று கூறி சிகிச்சை செய்து வருவதும் சமீபத்தில் அதிகமாகி வருகிறது. எனவே அந்த மருத்துவர் உண்மையில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளாரா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரிக்க உள்ளனர். உடலுக்கு மருத்துவம் பார்க்க வேண்டிய மருத்துவரே இப்படி செய்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க:ஐஏஎஸ் அதிகாரியாக நடித்து மாட்டிக்கொண்ட போலி ஆபிசர்... ஆப்பு வைத்து ஜெயிலில் சூப்பு குடிக்க வைத்த காவல் துறை !

தலைப்பு செய்திகள்

பிறந்த வீட்டுக்கு சென்ற தாய்.. இரண்டரை வயது மகன் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை.. தந்தையின் கொடூரம்!
பிறந்த வீட்டுக்கு சென்ற தாய்.. இரண்டரை வயது மகன் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை.. தந்தையின் கொடூரம்!
தஞ்சையில் அதிரடி வேட்டை! இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்ட ரூ.1 கோடி மதிப்பு 100 கிலோ கஞ்சா பறிமுதல் – 4 பேர் கைது
தஞ்சையில் அதிரடி வேட்டை! இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்ட ரூ.1 கோடி மதிப்பு 100 கிலோ கஞ்சா பறிமுதல் – 4 பேர் கைது
இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்ணுக்கு தொல்லை !! எச்சரிக்கை கொடுத்த கணவன் - என்ன நடந்தது ?
இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்ணுக்கு தொல்லை !! எச்சரிக்கை கொடுத்த கணவன் - என்ன நடந்தது ?
அதிகாரிகளை மிரளச் செய்த ரேஷன் அரிசி கடத்தல்! லாரியுடன் அரிசி மூட்டைகள் பறிமுதல்.. ஒருவர் கைது.
அதிகாரிகளை மிரளச் செய்த ரேஷன் அரிசி கடத்தல்! லாரியுடன் அரிசி மூட்டைகள் பறிமுதல்.. ஒருவர் கைது.

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 3XO: 24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
Embed widget