மேலும் அறிய
வேளாங்கண்ணியில் பைனான்சியர் கொலை - பரபரப்பான சிசிடிவி காட்சிகள்
வேளாங்கண்ணியில் பிரபல பைனான்சியரை அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
![வேளாங்கண்ணியில் பைனான்சியர் கொலை - பரபரப்பான சிசிடிவி காட்சிகள் CCTV footage of prominent velankanni financier murder released TNN வேளாங்கண்ணியில் பைனான்சியர் கொலை - பரபரப்பான சிசிடிவி காட்சிகள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/20/48a1d92d98da67dc15f8b076936a24661660972117262102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இறந்தவரின் புகைப்படம்
கடந்த 17ஆம் தேதி வேளாங்கண்ணியில் டிவிஆர் மனோகரனை அவரது அலுவலகத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவத்தின் அதிர்ச்சி சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள தெற்கு பொய்கைநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் டிவிஆர் மனோகர் அப்பகுதியில் பைனான்சியராகவும், வேளாங்கண்ணியில் தங்கும் விடுதி ஒன்றும் நடத்தி வருகிறார். இவருக்கும் ஒரு சிலருக்கும் முன் விரோதம் இருந்ததாக வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 17ம் தேதி இரவு மனோகர் வேளாங்கண்ணி முச்சந்தி அருகே உள்ள அவரது அலுவலகத்தில் அவரது நண்பர் மணிவேலுடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் கடையின் உள்ளே புகுந்து அங்கிருந்த டிவிஆர் மனோகரை அரிவாளால் சரமாரியாக தலையில் வெட்டி சாய்த்துள்ளனர்.
![வேளாங்கண்ணியில் பைனான்சியர் கொலை - பரபரப்பான சிசிடிவி காட்சிகள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/20/573cdbc52baaa043dabc4d3f4e99f2a31660972210619102_original.jpg)
இதனை அப்போது தடுக்க மணிவேலுக்கும் கையில் அரிவாளால் வெட்டு விழுந்தது டிவிஆர் மனோகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடித்து அன்று இரவே மருத்துவமனை வாசலிலும் நேற்று பறவை சந்தை அருகே இ சி ஆர் சாலையிலும் உயிரிழந்த மனோகரனின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் உயிரிழந்த மனோகரன் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் அவரௌ அரிவாளல் வெட்டி கொலை செய்யும் பரபரப்பு காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு வேளாங்கண்ணி ஆய்வாளர் ஆனந்தராஜ் மற்றும் கீவலூர் ஆய்வாளர் சோமசுந்தரம் தலைமையிலான இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலை செய்து விட்டு தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion