மேலும் அறிய

Crime: தாம்பரத்தை உலுக்கிய கொலை சம்பவம்...பாஜக நிர்வாகி கொடூர கொலை

சென்னை அடுத்த தாம்பரத்தில் பாஜக நிர்வாகி கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்

சென்னை அடுத்த தாம்பரத்தில் பாஜக நிர்வாகி கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
 
பலத்த வெட்டுக்காயங்களுடன் பிணமாக
 
சென்னை அடுத்த தாம்பரத்தை அருகே உள்ள  புதுபெருங்களத்தூர், காமராஜர் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் என்கிற பீரி வெங்கடேசன் (வயது35). ரவுடியான இவர் மீது தாம்பரம், பீர்க்கன்கரணை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும் பாரதிய ஜனதா கட்சியில் பெருங்களத்தூர், முடிச்சூர் பகுதி பட்டியலின மண்டல தலைவராக இருந்தார். இந்தநிலையில் இன்று காலை பழைய பெருங்களத்தூர், குட்வில் நகரில் உள்ள காலி இடத்தில் இருந்த முட்புரில் வெங்கடேசன் பலத்த வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்து இருப்பது தெரிந்தது.
 
பாஜக நிர்வாகி கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் - peerkankaranai police station
பாஜக நிர்வாகி கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் - peerkankaranai police station
 
போலீசுக்கு தகவல் 
 
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் பீர்க்கன் கரணை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வெங்கடேசன் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதால் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் பழிக்குப்பழியாக தீர்த்து கட்டியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் விசாணையை தீவிரப்படுத்தி கொலையாளிகள் குறித்து தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
 
பாஜக நிர்வாகி கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் - peerkankaranai police station
பாஜக நிர்வாகி கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் - peerkankaranai police station
 
3 பேர் ஜெயிலில் இருந்து 
 
வெங்கடேசன் நேற்று இரவு கடைசியாக யாருடன் சென்றார்? அவரை அழைத்து சென்றவர்கள் யார்? யார்? என்ற விபரத்தையும் சேகரித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்கடேசனுடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த 3 பேர் ஜெயிலில் இருந்து வெளியே வந்து உள்ளனர். தற்போது அவர்கள் தலைமறைவாக இருப்பதாக தெரிகிறது. இதனால் அவர்கள் மீதும் போலீசாருக்கு சந்தேகம் வலுத்து உள்ளது. அவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
 
 
பாஜக நிர்வாகி கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்
பாஜக நிர்வாகி கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்
 
இந்த பகுதியில் இருக்க வேண்டாம்
 
கொலையுண்ட வெங்கடசேனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு வீட்டில் இருந்த அவரை மர்ம கும்பல் வெட்டி கொல்ல முயன்றனர். இதில் வெங்கடேசன் உயிர் தப்பினார். இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. அப்போது போலீசார் வெங்கடேசனை இந்த பகுதியில் தற்போது இருக்க வேண்டாம் என்று எச்சரித்து உள்ளனர்.  இதைத்தொடர்ந்து வெங்கடேசன் புதுபெருங்களத்தூரை விட்டு வெளியே சென்றார். இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அவர் ஊருக்கு வந்து உள்ளார். இதனை அறிந்த எதிர்தரப்பினர் வெங்கடேசனை நோட்டமிட்டு பழிதீர்த்து விட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அவர் பா.ஜனதா கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜனதா பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
"ஸ்வீட் வாங்கித் தர்றேன் வா..." - 8 வயது சிறுமியிடம் செக்யூரிட்டி சில்மிஷம்.. கம்பி எண்ணும் நிலை
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
தஞ்சை பெரியகோவில் முன்பு யாசகர் கத்தியால் குத்திக்கொலை: மற்றொரு யாசகர் கைது
தஞ்சை பெரியகோவில் முன்பு யாசகர் கத்தியால் குத்திக்கொலை: மற்றொரு யாசகர் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget