மேலும் அறிய

வீட்டிற்கு சீல் வைத்த வங்கி அதிகாரிகள்; மன உளைச்சலில் தற்கொலை செய்த முதியவர்!

வங்கியில் வாங்கிய கடனுக்கான அசல் மற்றும் வட்டியைச் செலுத்தாமல் இருந்ததால், வங்கி நிர்வாகம் நவநீதம்மாளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் என்ன செய்வது என்று தெரியாமல் மன உளைச்சலில் இருந்து வந்தார் கஜபதி.

சென்னை மாதாவரத்தில் வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச்செலுத்தவில்லை எனக்கூறி வங்கி அதிகாரிகள் சீல் வைத்ததால் மனமுடைந்த முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கந்துவட்டியில் ஏற்படும் மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. ஆனால் சென்னையில் நிகழ்ந்துள்ள சம்பவம் சற்று வித்தியாசமானது என்று தான் கூற வேண்டும். கந்துவட்டிக்காரர் வட்டிக்கு பணம் கொடுக்கும் போது கையெழுத்திட்டு வாங்கிய பத்திரத்தை வங்கியில் வைத்துக் கடன் பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாதவரம் பஜார் தெருவைச்சேர்ந்தவர் 64 வயதான கஜபதி. இவர் தனது மனைவி சண்முக சுந்தரி மற்றும் தன்னுடைய தாய் நவநீதம்மாளுடன் வசித்துவந்தார். கடந்த 2003 ஆம் ஆண்டு யாருக்கும் தெரியாமல் வித்யா என்பவரிடம் ரூபாய் 2 லட்சம் கடன் பெற்றார் நவநீதம்மாள். அப்போது தன்னுடைய வீட்டை அடமானம் வைப்பது போல்  கடன் கொடுத்த  ஒரு பத்திரத்தில் நவநீதம்மாளிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு பணம் கொடுத்துள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக கடனைத்திருப்பி செலுத்தி வந்த நிலையிலும் கடன் கொடுத்த வித்யா, கஜபதியின் வீட்டுப்பத்திரத்தை நவநீதம்மாளுக்கு தெரியாமல் தாட்கோ வங்கியில் வைத்து ரூபாய் 9.5 லட்சம் கடன் பெற்றுள்ளார்.

  • வீட்டிற்கு சீல் வைத்த வங்கி அதிகாரிகள்; மன உளைச்சலில் தற்கொலை செய்த முதியவர்!

இந்நிலையில் தான் கடந்த 2009 ஆம் ஆண்டு இதுப்பற்றி தெரிந்துக்கொண்ட  கஜபதி, தன் தாயை ஏமாற்றி கடன் பத்திரத்தில் கையெழுத்து வாங்கியதோடு, வங்கியிலும் கடன் பெற்றுள்ளார் என வித்யா மீது மாதவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தாார். இதனையடுத்து வழக்கை விசாரித்த போலீசார், வித்யா மீது மோசடி வழக்குப்பதிவு செய்ததோடு, கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் வீத்யா வீட்டுப்பத்திரத்தை வாங்கி வங்கியில் வாங்கிய கடனுக்கான அசல் மற்றும் வட்டியைச் செலுத்தாமல் இருந்தமையால், வங்கி நிர்வாகம் நவநீதம்மாளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் என்ன செய்வது என்று தெரியாமல் மன உளைச்சலில் இருந்து வந்தார் கஜபதி.

இதனையடுத்து தான்  வங்கி அதிகாரிகள் நேற்று முன்தினம் கஜபதிக்கு சொந்தமான கடை மற்றும் வீட்டை பூட்டி சீல் வைத்தனர். இதனால் மனமுடைந்த கஜபதி நேற்று காலை தீடிரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து தகவலறிந்த மாதவரம் காவல்நிலைய போலீசார் தற்கொலை செய்து கொண்ட கஜபதியின் உடலைக் கைப்பற்றியதோடு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.

  • வீட்டிற்கு சீல் வைத்த வங்கி அதிகாரிகள்; மன உளைச்சலில் தற்கொலை செய்த முதியவர்!

ஆனால் அதற்கு முன்னதாக உயிரிழந்த கஜபதியின் உறவினர்கள், ஏற்கனவே வங்கியில் மோசடி வழக்கு விசாரணையில் இருக்கும் போது, எப்படி வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியும் என கஜபதியின் உடலை எடுக்க விடாமல் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget