சென்னை வங்கி கொள்ளையில் திடுக் ட்விஸ்ட்! ஊழியரே ஸ்கெட்ச் போட்டு கொள்ளை - விசாரணை தீவிரம்!
வங்கியின் ஊழியரே தனது கூட்டாளிகளுடன் இணைந்து கொள்ளையில் ஈடுபட்டது தற்போது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள ஃபெடரல் வங்கியின் தங்க நகைக்கடன் வழங்கும் கிளையான ஃபேட் பேங்க கோல்டு லோன்ஸ் வங்கி உள்ளது. இந்த வங்கியல்தான் கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்கு, காவலாளி, ஊழியர்களை கட்டிப்போட்டுவிட்டு தங்க நகைகள், பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்றதாக கூறப்படுகிறது.
GOLD ROBBERY AT A FEDBANK GOLD LOAN BRANCH AT CHENNAI'S ARUMBAKKAM
— J Sam Daniel Stalin (@jsamdaniel) August 13, 2022
3 MEMBER GANG SHUTS WORKERS IN A TOILET & ROBS GOLD SAY POLICE
INVESTIGATORS SAY AN INSIDER INVOLVED. SPECIAL TEAMS FORMED
பட்டப்பகலில் 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் முகமூடி அணிந்து வந்து கொள்ளையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அந்த வங்கியின் ஊழியரான முருகன் என்பவர் தனது கூட்டாளிகளுடன் இணைந்து கொள்ளையில் ஈடுபட்டது தற்போது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஃபேட் பேங்க கோல்டு லோன்ஸ் வங்கியில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கத்தியை காட்டி மிரட்டி மயக்க மருந்தை முகத்தில் அடித்து கொள்ளையில் ஈடுபட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Tamil Nadu | Armed robbers barge into FedBank (a Federal Bank subsidiary) in Arumbakkam, Chennai, looted gold & other valuables worth crores of Rupees & fled away. Anna Nagar Deputy Commissioner at the spot to investigate the matter. More details awaited: Police officials pic.twitter.com/TwiE2UloS5
— ANI (@ANI) August 13, 2022
இதுகுறித்து வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் அன்பு கூறுகையில், "இதே வங்கியில் தற்போது வரை வேலை செய்து கொண்டிருந்த முருகன் என்ற ஊழியர் தான் திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளார் என்பதை கண்டறிந்துவிட்டோம்.
வங்கியில் வேலை செய்யும் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது விரைவில் கண்டறியப்படும். விசாரணையில் இருப்பதால் இதற்கு மேல் எதுவும் தெரிவிக்க இயலாது. கொள்ளையில் ஈடுபட்டவரை கண்டுபிடித்துவிட்டதால் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்பதும், குற்றவாளிகளை பிடிப்பதும் எளிமையானது தான். இதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொள்ளை போன பொருட்களை மதிப்பிடும் பணி நடைபெற்று வருகிறது" என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்