மேலும் அறிய

ஆள் கடத்தல் வழக்கில் கைதான அதிமுக நிர்வாகிக்கு சேலம் மருத்துவமனையில் பரிசோதனை!

ஆள் கடத்தல் வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் ஆள் கடத்தல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அதிமுக விவசாய பிரிவு மாநில தலைவர் அன்பழகன் மருத்துவ பரிசோதனைக்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு உள்ளார்.

ஆள் கடத்தல் வழக்கில் கைதான அதிமுக நிர்வாகிக்கு சேலம் மருத்துவமனையில் பரிசோதனை!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஜெல்மாரம்பட்டியை சேர்ந்த முத்துவேல், சுரேஷ் இருவரும் டிராக்டர் வைத்து வேலை செய்து கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் பென்னாகரம் அடுத்த தாளப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த அதிமுக விவசாய பிரிவு மாநில தலைவரும், தருமபுரி மாவட்ட பால்வள தலைவருமான டி.ஆர்.அன்பழகன், தனது காரில் முருகன், மகேந்திரன் உள்ளிட்ட பலருடன் வந்து, முத்துவேல் மற்றும் சுரேஷ் இருவரையும் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் சுரேஷிடம் , உன் தம்பி எங்களது டீசலை திருடி ஜேசிபிக்கு ஊற்றி ஓட்டி வருகிறேன் என்று கூறி மிரட்டி, முத்துவேல் சுரேஷ் இருவரையும் ஆட்களை வைத்து தனது கடத்திச் சென்றுள்ளார். தொடர்ந்து பெத்தம்பட்டியில் உள்ள அன்பழகனுக்கு சொந்தமான கல்குவாரியில் வைத்து சுரேஷ், முத்துவேல் இருவரையும் ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை சொடர்ந்து கல்குவாரி பகுதிக்கு சென்ற முத்துவேல், சுரேஷ் உறவினர்களை, யாரும் உள்ளே வரக்கூடாது. உள்ளே வந்தீர்கள் என்றால் வெட்டி புதைத்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

ஆள் கடத்தல் வழக்கில் கைதான அதிமுக நிர்வாகிக்கு சேலம் மருத்துவமனையில் பரிசோதனை!

 இதனையடுத்து முத்துவேல் தந்தை பெரியசாமி பென்னாகரம் காவல் நிலையத்தில் பி.ஆர். அன்பழகன் மற்றும் முருகன், ராஜேந்திரன் ஆகியோர் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து பென்னாகரம் காவல் துறையினர் டி.ஆர்.அன்பழகன், முருகன், மகேந்திரன் உள்ளிட்டோர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மூவரையும் நேற்று கைது செய்தனர். அதிமுக முக்கிய பிரமுகர் கைது செய்யப்பட்டதால், பென்னாகரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காவல் துறையினர் வேனில் ஏற்றி சென்ற போது, சினிமா பாணியில், அன்பழகன் நெஞ்சு வலிப்பதாக துடித்துள்ளார்.  இதனையடுத்து சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனைக்கு பிறகு அன்பழகன் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனை முழுவதும் காவல் துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  அதிமுகவை சேர்ந்த டி.ஆர். அன்பழகன், அதிமுக விவசாய பிரிவு மாநில தலைவர், தருமபுரி  மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளராகவும், ஜெ ஜெயலலிதா பேரவை மாநில செயலாளராகவும், மாவட்ட ஊராட்சி குழு மற்றும் பென்னாகரம் ஒன்றியக் குழுத் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
"நம்பிக்கை, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் சங்கமம்" மகா கும்பமேளா குறித்து பூரித்து போன பிரதமர் மோடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
"நம்பிக்கை, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் சங்கமம்" மகா கும்பமேளா குறித்து பூரித்து போன பிரதமர் மோடி
Metro Time Table for Pongal; பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
TN Rain: இன்று 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பட்டியல் இதோ.!
இன்று 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பட்டியல் இதோ.!
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
Embed widget