Crime: உல்லாசத்துக்கு அழைத்த இளம்பெண்! ஆசையில் ஓடிய வாலிபர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! பணமும் அபேஸ்!
சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி 20 ஆம் தேதி 40 வயதுமிக்க பெண் ஒருவர் புகார் ஒன்றை அளித்தார். தற்சமயம் வடபழனியில் உள்ள ஒரு வீட்டில் நர்ஸ் ஆக பணியாற்றி வருகிறார்.
சென்னையில் தனிமையில் இருக்கலாம் என்ற ஆசையில் வாட்ஸ்அப்பில் வந்த இடத்திற்கு பெண்ணை தேடி சென்ற வாலிபர்களுக்கு அதிர்ச்சியடையும் அளவிற்கு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி 20 ஆம் தேதி 40 வயதுமிக்க பெண் ஒருவர் புகார் ஒன்றை அளித்தார். அதில் நான் வீட்டில் பணியாற்றும் செவிலியராக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை பார்த்து வருகிறேன். தற்சமயம் வடபழனியில் உள்ள ஒரு வீட்டில் பணியாற்றி வருகிறேன். இதற்கிடையில் எனக்கு ஆதம்பாக்கத்தில் உள்ள யாதவர் தெருவில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சாந்தா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
அவர் ஓய்வு நேரத்தில் தனது வீட்டை பயன்படுத்திக் கொள்ள சொன்னதால் கடந்த 10 நாட்களாக மதியம் சாந்தா வீட்டுக்கு வந்து இரவு வடபழனி செல்லும் வரை அங்கேயே இருப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன். இப்படியான நிலையில் கடந்த ஜனவரி 20 ஆம் தேதி சாந்தாவுக்கு தெரிந்த 4 வாலிபர்கள் வீட்டிற்கு வந்தனர். உள்ளே வந்த அவர்கள் என்னிடம் நீ யார்? என கேட்டதோடு, நாங்கள் கேட்ட பெண் நீ இல்லையே, சாந்தாவை உடனே இங்கே வர சொல் என சத்தம் போட்டனர்.
மேலும் கத்தியை காட்டி மிரட்டி வீட்டில் இருந்த டிவி, எனது செல்போன், பர்சில் இருந்த ரூ.5 ஆயிரம் பணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சென்று விட்டனர். அதேசமயம் வீட்டில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த பக்கத்து வீட்டுக்காரரின் மொபட் பைக்கையும் கொண்டு சென்று விட்டனர். எனவே சம்பந்தப்பட்ட 4 நபர்களிடம் இருந்து பணம், டிவி, பைக் ஆகியவற்றை மீட்டு தர வேண்டும் என அப்பெண் தனது புகாரில் குறிப்பிட்டு இருந்தார். இதனடிப்படையில் ஆதம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் பிரபு, உதவி ஆய்வாளர்கள் மோகன் தாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
அதில் சாந்தா வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பு பெருமாள் என்பவருக்கு சொந்தமானது என்றும், அந்த வீட்டுக்கு அவர் வந்து 7 மாதங்களே ஆகியுள்ளதும் தெரிய வந்தது. மேலும் சாந்த அந்த வீட்டை பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப்பில் தனது புகைப்படத்தை அனுப்பியுள்ளார். அதனைப் பார்த்த 4 வாலிபர்கள் தலா ரூ.5 ஆயிரம் செலுத்தி சாந்தாவுக்கு கொடுத்து வீட்டுக்கு வந்துள்ளது தெரிய வந்தது.
வந்த இடத்தில் சாந்தாவுக்கு பதில் 42 வயதான பெண் இருப்பதை கண்டு அந்த வாலிபர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக ஆத்திரமடைந்தனர். அதனால் தங்கள் பணத்திற்கு பதிலாக வீட்டில் இருந்த டிவி, அப்பெண்ணின் செல்போன் உள்ளிட்டவற்றை எடுத்து சென்றதும் தெரிய வந்தது. உடனே காவல்துறை அதிகாரிகள் சாந்தாவை தொடர்பு கொண்டபோது அவர் செல்போன் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து சாந்தா மற்றும் அந்த 4 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.