Crime:மகனை கோவா அழைத்துச்சென்று கொன்ற கொடூர கொல்கத்தா தாய்! தவித்துப்போய் ஓடிவந்த தமிழ்நாட்டு தகப்பன்! திடுக்கிடும் தகவல்கள்!
4 வயது குழந்தையை கொலை செய்த வழக்கில் 6 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோவா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரை சேர்ந்த சி.ஈ.ஓ சுசனா ஜனவரி 6 ஆம் தேதி தனது 4 வயது மகனுடன் பெங்களூருவில் இருந்து கோவா சென்றுள்ளார். இரண்டு நாட்களுக்கு பின் கோவாவில் இருந்து மீண்டும் பெங்களூரு செல்வதற்காக ஹோட்டல் ஊழியர்களிடம் டாக்ஸி புக் செய்ய கேட்டுக்கொண்டுள்ளார். அப்போது ஹோட்டல் ஊழியர்களும் டாக்ஸி புக் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து அவரது அறையை சுத்தம் செய்ய ஊழியர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது அந்த அறையில் ரத்தக் கரை இருந்ததை பார்த்து அதிர்த்து போனா அவர் உடனடியாக நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். பின் போலீசாரிடம் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த டாக்ஸி ஓட்டுநருக்கு அழைத்து பேசியுள்ளார், காரில் இருக்கும் பெண்ணிடம் குழந்தை பற்றி கேளுங்கள் என்று போலீசார் கூறினர். அந்த கார் ஓட்டுநர் கேட்க, உறவினர் விட்டில் குழந்தை இருப்பதாக பெண் சுசனா கூறினார். குழந்தை இருக்கும் முகவரியும் கொடுத்துள்ளார். அங்கு சென்ற போலீசார் அது போலி முகவரி என தெரியவந்துள்ளது. மீண்டும் ஓட்டுநருக்கு தொலைப்பேசி மூலம், அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து, பெங்களூருவில் இருந்து 200 கி.மீ தூரத்தில் உள்ள சித்ரதுர்கா காவல் நிலையத்தில் கார் வந்தடைந்தது. இதனை அடுத்து, காரில் இருந்து பேக்கை போலீசார் சோதனை செய்தபோது, நான்கு வயது மகன் உடல் இருந்தது தெரியவந்தது.
அதனை தொடர்ந்து சுசனாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தனது 4 வயது மகனை கொலை செய்தது ஒப்புக்கொண்டார். அந்த குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூச்சுத்திணறல் காரணமாக குழந்தைக்கு மூக்கு மற்றும் வாயில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், உடலில் எந்த காயமும் இல்லை என்றும், இந்த சம்பவம் நடைபெறும் நேரத்தில் குழந்தை உயிருடன் இருந்ததாகவும் பிரேத பரிசோதனை முடிவில் தெரிய வந்தது.
கொலைக்கான காரணம் என்ன?
சுசனா பெங்காலை சேர்ந்தவர், இவர் 2008 ஆம் ஆண்டு பெங்களூருக்கு பணி நிமித்தமாக வந்தார். 2010 ஆம் ஆண்டு சுசனாவுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த தெச்சி வெங்கட்ராமன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. 2019 ஆம் இந்த தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இவர்களுக்கு பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் 2022 ஆம் ஆண்டு விவாகரத்திற்காக நீதிமன்றம் அனுகியுள்ளனர். அங்கு ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் குழந்தையை தந்தை வெங்கட்ராமன் சந்திக்கலாம் என அனுமதி வழங்கியுள்ளனர்.
தமிழ்நாட்டை சேர்ந்த தெச்சி வெங்கட்ராமன் இந்தோனேசியாவில் பணியாற்றி வந்துள்ளார், ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் தனது குழந்தையை பார்க்க வந்துள்ளார். இந்த செயல்பாடு சுசனாவிற்கு பிடிக்கவில்லை. இதனால் தனது குழந்தையை கோவாவிற்கு அழைத்து சென்று இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சுசனாவை 6 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோவா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தந்தை தெச்சி வெங்கட்ராமன் குழந்தையின் உடலை அடையாளம் கண்டபின், குழந்தையின் உடல் ஒப்படைக்கப்பட்டது.
பெங்களூருவில் ஒரு ஏஐ நிறுவனத்தை உருவாக்கி அதன் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் சுசனா சேத். இந்த ஏஐ நிறுவனம் நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் உருவாக்குவதற்கு முன் சீனியர் டேட்டா சயின்டிஸ்டாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.