Watch video: பேக்கரி கடையில் இளம்பெண்ணிடம் செல்போன் திருட்டு - அதிர்ச்சி வீடியோ
ஆரணியில் பேக்கரி கடையில் பெண்ணிடம் செல்போன் திருடும் வாலிபர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மேல்சீசமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் திவ்யா வயது (19) என்ற இளம்பெண் சோளிங்கர் பகுதியில் உள்ள தனியார் கம்பனியில் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக ஆரணி புதிய பேருந்த நிலையம் வந்துள்ளார். அப்போது புதிய பேருந்து நிலையம் எதிரே இருந்த சேர்மன் ஸ்வீட்ஸ் என்ற பேக்கரியில் ஸ்வீட்ஸ் வாங்க உள்ளே சென்றார். கடையில் கூட்டம் அதிக இருந்தது, ஸ்வீட் வாங்குவதற்காக வந்த இளம்பெண்ணை பின்தொடர்ந்து வந்த மர்மநபர் சிறிது நேரத்தில் பிளாஸ்டிக் பையில் தனது கையை மறைத்தவாறு இளம்பெண திவ்யாவின் செல்போனை லாவகமாக திருடி சென்றுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள பேக்கரியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணிடம் செல்போன் திருடும் வாலிபர் சிசிடிவி காட்சி வெளியிட்டதால் பரபரப்பு.@SRajaJourno @abpnadu pic.twitter.com/8OgVheQaUu
— Vinoth (@Vinoth05503970) September 20, 2022
அதன் பிறகு ஸ்வீட் வாங்கிக் கொண்டு அங்கிருந்து புதிய பேருந்து நிலையம் சென்ற திவ்யா செல்போன் பறிபோனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பேருந்து நிலையத்தில் கீழே விழுந்துள்ளதா என தேடிப்பார்த்து அருகில் நின்று இருந்த நபர்களிடம் கேட்டார். ஆனாலும் செல்போன் கிடைக்கவில்லை பின்னர் ஸ்வீட்ஸ் கடையில் சென்று கடையின் உரிமையாளரிடம் தனது செல்போன் காணவில்லை என கூறியுள்ளார். அதன் பிறகு கடையின் உரிமையாளர் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது திவ்யா அருகில் நின்ற டிப்டாப் ஆசாமி செல்போன் திருடும் காட்சிகள் மூலம் தெரியவந்தன.
உடனடியாக திவ்யா ஆரணி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து செல்போன் திருடும் சிசிடிவிகாட்சியை கொண்டு மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் செல்போன் இருக்கும் இடத்தை உரிய சைபர் கிரைம் காவல்துறையினரிடம் உதவியை நாடியுள்ளனர். மேலும் இளம்பெண்ணிடம் செல்போன் திருடும் காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது திருவண்ணாமலை நகராட்சி திருவண்ணாமலை செல்லும் வேலூர் சாலையில் உள்ள ராமகிருஷ்ணா உணவகம் எதிரில் ஆட்டோவில் பழக்கடை நடத்தி வருபவரிடம் அடையாளம் தெரியாத மூன்று மர்ம நபர்கள் பழக்கடைகாரின் கையில் இருந்த கையில் வைத்திருந்த பணப்பையினை விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் வந்து கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.