திருவண்ணாமலை: காப்பகத்தில் இருந்த 2 குழந்தைகள் மாயம் - போலீசார் தீவிர விசாரணை
திருவண்ணாமலையில் உள்ள காப்பகத்தில் வெளியே விளையாடிக்கொண்டு இருந்த 5 வயது இரண்டு குழந்தைகள் மாயமானதை தொடர்ந்து போலீசார் தீவீர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் கடந்த மாதம் 2ம் தேதி சுமார் 5 வயது மதிக்கத்தக்க 2 ஆண் குழந்தைகள் ஆதரவின்றி மத்திய பேருந்து நிலையத்தில் அழுதவாறு இருப்பதாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் சைல்டு லைன் அலுவலகத்திற்கு தொலைபேசியின் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சைல்டு லைன் அலுவலர்கள் பேருந்து நிலையத்தில் இருந்த சக்தி வயது (5), கிருஷ்ணா ஆகிய இரண்டு குழந்தைகளையும் மீட்டு திருவண்ணாமலை பெரும்பாக்கம் சாலையில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்து இருந்தனர்.
இந்நிலையில், காப்பகத்தில் தங்கி இருந்து வந்த குழந்தைகள் இருவரும் நேற்று காப்பகத்திற்கு வெளியே விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர்.
பின்னர் மதிய உணவுக்கு அழைத்து செல்ல பொறுப்பாளர் பச்சையம்மாள் வெளியே வந்துள்ளார். அப்போது, சக்தி, மற்றும் கிருஷ்ணா ஆகிய இரண்டு குழந்தைகளும் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார் பொறுப்பாளர் பச்சையம்மாள். அதனையடுத்து பொறுப்பாளர் பச்சையம்மாள் இரண்டு குழந்தைகளையும் அக்கம் பக்கம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தேடி பார்த்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் இரண்டு குழந்தைகளும் கிடைக்கவில்லையாம். மேலும் இதுகுறித்து பச்சையம்மாள் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இரண்டு குழந்தைகளையும் தேடிவருகின்றனர்.
மேலும் இந்த விசாரணையில், காணாமல் போன குழந்தைகளின் தாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும், இதனையடுத்து அவரது உறவினர்கள் குழந்தையை பராமரிக்காமல் திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் விட்டு சென்றதும், பின்னர் அந்த குழந்தைகள் சைல்டு லைன் அலுவலர்கள் மீட்டு காப்பகத்தில் தங்கவைத்தும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி காணாமல் போன இரண்டு குழந்தைகளும் தனது தாய் இறந்து போன துயரத்தினால்ல் மனவேதனையில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அரசு காப்பகத்தின் வெளியே விளையாடி கொண்டு இருந்த 5 வயது இரண்டு குழந்தைகள் காணமல் போன சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
In India, CHILDLINE 1098 is the first national 24-hour free emergency phone outreach service for children in need of care and protection. Its mission, through the guiding principles ‘Connect’, ‘Catalyse’, ‘Collaborate’ and ‘Communicate’, is to create a safe system able to ensure the rights that should be granted to every single child of the world.