மேலும் அறிய

Crime: வழிப்பறி செய்யப்பட்ட ரூ.20.22 லட்சம்.. புகார் கொடுத்தவரையும் கைது செய்த போலீசார்.. என்ன நடந்தது?

கடந்த ஜூன் மாதம் 27 ஆம் தேதி ராயப்பேட்டையில் உள்ள தனது நண்பரை சந்திக்க ரூ.20.22 லட்சம் பணத்துடன் சென்றுள்ளார். அண்ணாசாலை எஸ்பிஐ வங்கி அருகே சென்ற போது 2 பைக்கில் வந்த 6 பேர் சிவபாலனை வழிமறித்துள்ளனர்.

சென்னையில் மருத்துவ உபகரணங்கள் விற்பனையாளரை தாக்கி ரூ.20 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 4 பேரை சிசிடிவி உதவியுடன் போலீசார் கைது செய்துள்ளனர். 

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள கண்ணமங்கலத்தைச் சேர்ந்த சிவபாலன் என்பவர் பிடெக் மற்றும் பயோ டெக் படித்து விட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். இவர் சேப்பாக்கம் கலைவாணர் அரங்கிற்கு எதிரே உள்ள லாட்ஜில் தங்கியுள்ளார். இதனிடையே கடந்த ஜூன் மாதம் 27 ஆம் தேதி ராயப்பேட்டையில் உள்ள தனது நண்பரை சந்திக்க ரூ.20.22 லட்சம் பணத்துடன் சென்றுள்ளார். 

அண்ணாசாலை எஸ்பிஐ வங்கி அருகே சென்ற போது 2 பைக்கில் வந்த 6 பேர் சிவபாலனை வழிமறித்துள்ளனர். அவரை அரிவாளால் வெட்டியதோடு மட்டுமல்லாமல் ரூ.20.22 லட்சம் பணத்தையும் பறித்துக் கொண்டு சென்றதாக ரத்த காயங்களுடன் சிவபாலன் அண்ணாசாலையில் உள்ள காவல்நிலையத்தில் புகாரளித்தார். இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வந்தனர். இதில் 6 பேர் கொண்ட கும்பல் இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் காயம் காரணமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவபாலனிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். 

அதில் ரூ.20.22 லட்சம் பணமானது தான் தனியாக மருத்துவ உபகரணங்கள் விற்பனை கடை தொடங்க முடிவு செய்து பெற்றோர் மற்றும் உறவினர்கலிடம் ரூ.20 லட்சம் பெற்று வந்ததாகவும், மீதமுள்ள 22 ஆயிரம் தான் வைத்திருந்ததாகவும் கூறிய நிலையில் சிவபாலனிடம் அதற்கான வரவு குறித்த ஆதாரமும் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் சிவபாலனிடம் துருவி துருவி விசாரித்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

அதாவது அந்த பணம் பாரிமுனையில் இருந்து ஒரு நபரிடம்  வாங்கி வந்த ஹவாலா பணம் என தெரிய வந்தது.இதனைத் தெரிந்து கொண்ட நபர்கள் பின் தொடர்ந்து வந்து சிவபாலனை அரிவாளால் வெட்டி பணத்தை வழிப்பறி செய்து சென்றதும் உறுதியானது. இதனையடுத்து குற்றவாளிகளை தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அதில் சிவபாலனிடம் பணத்தை பறித்த பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், கே.கே.நகரை  சேர்ந்த ஷேக் இஸ்மாயில், பாக்கியராஜ், சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வரும் நிலைஅயில் வழிப்பறி செய்த ரூ.20.22 லட்சம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதேசமயம் ஹவாலா பணத்தை தன்னுடைய பணம் என பொய் புகாரளித்த சிவபாலனையும் போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

திருமணம் மீறிய உறவு !! தட்டி கேட்டவர்கள் மீது கஞ்சா கும்பல் தாக்குதல்
திருமணம் மீறிய உறவு !! தட்டி கேட்டவர்கள் மீது கஞ்சா கும்பல் தாக்குதல்
Nagercoil Sabarivarman :நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
கடல் வழியே இலங்கைக்கு போலி மருந்துகள் கடத்தல்: புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் கைது!
கடல் வழியே இலங்கைக்கு போலி மருந்துகள் கடத்தல்: புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் கைது!
15 வயது பள்ளி மாணவி கர்ப்பம் !! காதலிப்பதாக ஏமாற்றி சிறுமியுடன் உல்லாசம் !! போக்சோவில் கைது
15 வயது பள்ளி மாணவி கர்ப்பம் !! காதலிப்பதாக ஏமாற்றி சிறுமியுடன் உல்லாசம் !! போக்சோவில் கைது

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
Nagercoil Sabarivarman :நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
JanaNayagan Release Date: ஒரு வாரத்தில் ஜனநாயகன் ரிலீஸ்.. பண்டிகையை கொண்டாடுங்க.. வெளியான அறிவிப்பு!
JanaNayagan Release Date: ஒரு வாரத்தில் ஜனநாயகன் ரிலீஸ்.. பண்டிகையை கொண்டாடுங்க.. வெளியான அறிவிப்பு!
ஒரே ஆண்டில் ஒரு லட்சம் ஏக்கர் காலி! தமிழகத்தை உலுக்கும் தண்ணீர் பற்றாக்குறை! முழு விபரம் உள்ளே!
ஒரே ஆண்டில் ஒரு லட்சம் ஏக்கர் காலி! தமிழகத்தை உலுக்கும் தண்ணீர் பற்றாக்குறை! முழு விபரம் உள்ளே!
Embed widget