JanaNayagan Release Date: ஒரு வாரத்தில் ஜனநாயகன் ரிலீஸ்.. பண்டிகையை கொண்டாடுங்க.. வெளியான அறிவிப்பு!
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி கிட்டதட்ட முடிவு செய்யப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. முதலமைச்சர் ஜோசப் விஜய் கடைசியாக நடித்துள்ள ஜனநாயகன் படத்தைக் காண ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறது.

தமிழக முதலமைச்சர் விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் அடுத்த வாரம் வெளியாகலாம் என்ற தகவலை அப்படத்தின் இணை தயாரிப்பாளரான ஜெகதீஸ் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ரிலீசாகாமல் தவிக்கும் ஜனநாயகன்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்த தமிழ்நாட்டின் இன்றைய முதலமைச்சர் ஜோசப் விஜய் கடைசியாக “ஜனநாயகன்” என்ற படத்தில் நடித்துள்ளார். ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்துள்ளது. ஜனநாயகன் படம் தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் முக்கிய கேரக்டரில் மமிதா பைஜூ நடித்திருக்கிறார். மேலும் நரேன், பிரியாமணி, நாசர், கௌதம் மேனன், பாபி தியோல் போன்றோரும் இடம் பெற்றுள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படம் விஜயின் 69வது படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை மேலும் சிறப்பிக்கும் பொருட்டு விஜயின் கடைசி சில படங்களை இயக்கிய அட்லீ, நெல்சன் திலீப்குமார், லோகேஷ் கனகராஜ் ஆகிய 3 பேரும் கேமியோ ரோலில் வந்துள்ளனர். இப்படி பல சிறப்புகளைக் கொண்ட ஜனநாயகன் ரிலீசாகாமல் தவித்து வருகிறது.
Also Read: Prashanth: ரீல்ஸ் மூலம் ட்ரெண்டாகும் பாடல்கள்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் நடிகர் பிரஷாந்த்!
ரிலீஸ் தேதியை குறித்த ஜோசப் விஜய்
இந்த நிலையில் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து ஜனநாயகன் படத்தை வெளியிடும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. மறு தணிக்கைச் சான்றிதழ் பெற அனுப்பப்பட்ட நிலையில் 12 இடங்களில் திருத்தம் சொல்லப்பட்டு ஏ சான்றிதழ் படத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் படத்தை ரிலீஸ் செய்யும் பணிகளும் வேகமெடுத்தன. இதனிடையே ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி கிட்டதட்ட முடிவு செய்யப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது.
அந்த படத்தின் இணை தயாரிப்பாளரும், தற்போது முதலமைச்சர் விஜயின் தனிப்பட்ட செயலருமாக உள்ள ஜெகதீஸ் பழனிசாமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை வைத்துள்ளார். அதில் ஜனநாயகன் படத்தில் இடம் பெற்ற ராவண மவன்டா பாடல் ஒலிக்க, இந்த எதிர்பார்ப்பு நிஜமாகப்போகிறது. ஜூலை 23ம் தேதி வரை காத்திருக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஜனநாயகன் படம் ஜூலை 23ம் தேதி வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே வெளிநாடுகளில் ஜூலை 24ம் தேதி ஜனநாயகன் படம் ரிலீஸாவதாக டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கியிருக்கிறது. இன்னும் ஒரு வார காலமே இருப்பதாக விஜய் ரசிகர்கள் பண்டிகையை கொண்டாடவும், தங்கள் ஆஸ்தான நாயகனை கடைசியாக ஒரு முறை சினிமா திரையில் காணவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த வார இறுதிக்குள் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதியோடு புது ட்ரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















