(Source: ECI/ABP News/ABP Majha)
காஞ்சிபுரம் : புகார் அளித்த வியாபாரி கொலை வழக்கு.. தப்பி ஓடிய ரவுடிகள்.. தொடரும் பரபரப்பு.. நடந்தது என்ன?
செங்கல்பட்டு மாவட்டம் ஓட்டேரி அருகே நடைபெற்ற மெடிக்கல் கடை உரிமையாளர் கொலை வழக்கில் 3 ரவுடிகள் கைது
சென்னை ( Chennai News ) : சென்னை மண்ணிவாக்கம் ராசாத்தி கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த வினோத்குமார் வயது 44 இவரது மனைவி கஸ்தூரி, இவர்களுக்கு ஜீவனா என்ற 17 வயது மகளும், ரோஷன் 14 வயது மகனும் உள்ளனர். வினோத்குமார் ஓட்டேரியிலுள்ள ஐந்தாவது பிரதான சாலையில் மருந்து கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடத்த 29-ஆம் தேதி இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு அருகில் உள்ள பேக்கரி கடைக்கு சென்று உணவுப்பொருட்கள் வாங்கி கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் வினோத் குமாரை தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.
இதனால் ரத்த வெள்ளத்தில் வினோத் குமார் உயிரழந்தார் தகவல் அறிந்து வந்தால் ஓட்டேரி போலீசார் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கார் திருட்டில்
ஏற்கனவே அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சிலம்பு என்கிற சிலம்பரசன் மாமூல் கேட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொலைபேசி மூலம் மிரட்டியாக வினோத்குமார் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் கைது செய்யபட்டார். பின்பு வெளியே வந்த சிலம்பரசன் கார் திருட்டில் ஈடுபட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கடலூர் சிறையில் அடைக்கபட்டுள்ளார்.மேலும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சிலம்பரசன் ஆதரவாளர்கள் சிலர் வினோத்குமாரிடம் அளித்த புகாரை திருப்பி பெற வேண்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் நிலையில் சந்தேக அடிப்படையில் சிலம்பரசனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
வாபஸ் பெறுமாறு ரவுடி சிலம்பரசன்
கடையில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிராக்களை ஆய்வு செய்த போது சம்பவத்தன்று சந்தேகத்துக்கு இடமான வகையில் ரவுடி சிலம்பரசனின் கூட்டாளிகள் இருவர் மாத்திரை வாங்குவது போல வினோத்தின் மெடிக்கல் கடைக்கு வந்து நோட்ட மிட்டு சென்றது தெரியவந்தது. அதனை வைத்து விசாரணையை முன்னெடுத்த போது, மாமூல் கேட்டு மிரட்டிய வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில், வினோத் சாட்சி சொன்னால், தன்னால் ஜெயிலில் இருந்து வெளியே வர இயலாது என்பதால் கூட்டாளிகளை அனுப்பி தன் மீதான வழக்கை வாபஸ் பெறுமாறு ரவுடி சிலம்பரசன் மிரட்டியதாகவும், வினோத் முடியாது என்று மறுத்ததால் இந்த கொலை நடந்திருப்பதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
புளியந்தோப்பை சேர்ந்த கார்டன் சரத் என்பவரை அழைத்து வந்து சிலம்பரசனின் உறவினரான சூர்யாவும், கூட்டாளி திருவேற்காடு மணிகண்டனும் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்தியதாக கிடைத்த தகவலின் பேரில் அவர்கள் 3 பேரையும் போலீசார் தேடி வந்தனர். செல்போன் சிக்னலை வைத்து அவர்கள் மண்ணிவாக்கத்தில் உள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றில் மொட்டை மாடியில் பதுங்கி இருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.
கால்களில் எலும்பு முறிவு
அந்த கட்டிடத்தில் ஏறி அவர்களை மடக்கிப்பிடிக்க முயன்றபோது போலீசாரிடம் இருந்து தப்பிப்பதறகாக 3 பேரும் மொட்டை மாடியில் இருந்து குதித்துள்ளனர். குதித்த வேகத்தில் இருவருக்கு கால்களில் எழும்பு முறிவு ஏற்பட்டதாகவும், சித்ரா என்று காதலியின் பெயரை பச்சை குத்தியவனுக்கு வலது கையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிவித்த போலீசார் அவர்களை மீட்டு தூக்கிச்சென்று மருத்துவமனையில் அனுமதித்து 3 பேருக்கும் மாவுக்கட்டு போட்டு விட்டதாக தெரிவித்தனர்.
மெடிக்கல் ஷாப் உரிமையாளர் வினோத்தை கொடூரமாக கொலை செய்ய வேண்டும், அப்போது தான் நம் மீது இருக்கும் பயம் மக்களுக்கு போகாது என்று சிலம்பரசன் கூறியதால், வினோத் மெடிக்கல் ஷாப் மூடிவிட்டு வரும் வரை சாலையில் காத்திருந்து கொலை செய்ததாக சிக்கியவர்கள் வாக்குமூலம் அளித்தனர். மாவுக்கட்டுடன் மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய ரவுடி வினோத் என்பவனை தேடி வருகின்றனர்.