மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Mamallapuram Drowning : மாமல்லபுரத்தில் கொடூரம்.. அலையில் சிக்கி 3 பேர் பரிதாப உயிரிழப்பு..
குடிரயசு தின விடுமுறையை கழிக்க சுற்றுலா வந்தபோது நடந்த துயர சம்பவம்..
![Mamallapuram Drowning : மாமல்லபுரத்தில் கொடூரம்.. அலையில் சிக்கி 3 பேர் பரிதாப உயிரிழப்பு.. 3 people, including a Chennai Metropolitan Transport Corporation driver, were killed in a giant wave while bathing in Mamallapuram sea Mamallapuram Drowning : மாமல்லபுரத்தில் கொடூரம்.. அலையில் சிக்கி 3 பேர் பரிதாப உயிரிழப்பு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/26/546953fe0d0017d5b6b215ab9ed46ecc1706286949501113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மாமல்லபுரம் ( File Photo )
குடிரயசு தின விடுமுறையை கழிக்க சுற்றுலா வந்தபோது நடந்த துயர சம்பவம். மாமல்லபுரம் கடலில் குளிக்கும்போது ராட்சத அலையில் சிக்கி சென்னை மாநகர போக்குவரத்து கழக ஓட்டுனர் உள்ளிட்ட 3 பேர் உயிரிழப்பு
மாமல்லபுரம் சுற்றுலா தளம்
செங்கல்பட்டு ( Chengalpattu News ) : செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ஜுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, புலிக்குகை, ஆகிய புராதன சின்னங்களை கண்டுகளிக்க நாள்தோறும் பல ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இன்று குடியரசு தின விடுமுறை என்பதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான பயணிகள் மாமல்லபுரம் சுற்றுலா வந்திருந்தனர்.
![குடிரயசு தின விடுமுறையை கழிக்க சுற்றுலா வந்தபோது நடந்த துயர சம்பவம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/26/14a4d1cab41a4427cb27cafb8673d7521706286828946113_original.jpg)
நடுக்கடலுக்கு இழுத்துச்சென்ற ராட்சத அலை
இதில் சென்னை அடுத்த ஸ்ரீபெரும்பதூர் சோமங்கலம் பகுதியை சேர்ந்த நண்பர்கள் சிலர் தங்கள் குடும்பத்துடன் மொத்தம் 7 பேர் மாமல்லபுரம் சுற்றுலா வந்தனர். அவர்கள் மாமல்லபுரம் பகுதியில் உள்ள முக்கிய புராதன சின்னங்களை கண்டு ரசித்து விட்டு இறுதியாக கடற்கரைக்கு வந்தனர். இதில் 3 பேர் கடலில் குளித்தனர். இதில் நண்பர்களான 2 பேரை ராட்சத அலை நடுக்கடலுக்கு இழுத்து சென்றது. அவர்கள் இருவரும் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தனர்.
![சென்னை மாநகர போக்குவரத்து கழக ஓட்டுனர் உள்ளிட்ட 3 பேர் உயிரிழப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/26/92d072509988f30d3f183afb8fed6d611706286854223113_original.jpg)
ஒரு மணி நேரம் கழித்து இருவரின் உடல்
இறந்தவரில் ஒருவர் சோமங்கலம், பஜனை கோவில் தெருவை சேர்ந்த மோகன் (வயது 34), அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்துவருகிறார். மற்றொருவர் சென்னை திருநீர்மலை அடுத்துள்ள நாகல்கழனி, பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த பாலு (வயது 44) என்பவர் ஆவார். இவர் லோடுமேனாக வேலை செய்து வருகிறார். சுமார் 1 மணி நேரம் கழித்து இருவரின் உடல் அதே பகுதியில் கரை ஒதுங்கியபோது உடன் வந்த உறவினர்கள் இருவரின் உடரை பார்த்து கதறி அழுதனர்.
![மாமல்லபுரம் போலீசார் 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பிரேதசோதனைக்காக செங்கல்பட்டு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/26/40031bb91b9a99e63acfea6b82e9f72b1706286912172113_original.jpg)
வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரணை
அதேபோல் உத்திரமேரூர் அடுத்த களியாம்பூண்டி பகுதியை சீனிவாசன்(வயது 36), சென்னை மாநகர போக்குவரத்து கழக ஓட்டுனராக உள்ள இவரும் சுற்றுலா வந்து கடலில் குளித்தார். ராட்சத அலையில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக இறந்தார். பிறகு தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த மாமல்லபுரம் போலீசார் 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத சோதனைக்காக செங்கல்பட்டு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
![Mamallapuram Drowning : மாமல்லபுரத்தில் கொடூரம்.. அலையில் சிக்கி 3 பேர் பரிதாப உயிரிழப்பு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/26/7a973d9fd8ac1837b13d83f23b148dff1706286979324113_original.jpg)
தொடரும் சம்பவங்கள்
தொடர்ந்து கோவளம் முதல் மகாபலிபுரம் வரை உள்ள கடற்கரையில் அவ்வப்பொழுது, இது போன்ற சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. காவல்துறையினர் முறையாக கண்காணிப்பு பணியில் ஈடுபடாமல் ஈடுபடாமல் மக்கள் கடலில் இறங்கி, ஆழம் வரை செல்ல விடுவதால் இந்த சம்பவம் நடைபெறுவதாக , குற்றச்சாட்டு எழுந்துள்ளது
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
பொழுதுபோக்கு
மதுரை
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion