மேலும் அறிய

Crime: திருச்சியில் கள்ளக்காதலால் கொலை செய்யபட்ட வழக்கு - 3 பேர் கைது

திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியில் கள்ளத்தொடர்பால் ஏற்பட்ட பிரச்சனையில் ஒருவர் குத்தி கொலை செய்யபட்ட வழக்கில் 3 பேர் கைது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் காமராஜர் காலனியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சின்னராசு(வயது 35). டிரைவரான இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவரது மனைவி இறந்துவிட்டார். இதேபோல் மண்ணச்சநல்லூர் காந்தி நகரை சேர்ந்தவர் புல்லட் ராஜா என்ற நளராஜா(41). இவர் முன்னாள் எம்.எல்.ஏ. பரமேஸ்வரி முருகனின் தம்பி ஆவார். கடந்த ஜனவரி மாதம் அதே பகுதியை சேர்ந்த லாரி உரிமையாளரான சதீஷ்குமார்(32) என்பவரை கொலை செய்த வழக்கில், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நளராஜா கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் நளராஜாவின் மனைவி கிருஷ்ணவேணிக்கும், சின்னராசுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து ஜாமீனில் நளராஜா வெளியே வந்தார். இதையடுத்து அவர் தனது மனைவிக்கும், சின்னராசுக்கும் இடையே இருந்த கள்ளத்தொடர்பை அறிந்து இருவரையும் கண்டித்துள்ளார். ஆனாலும் இருவரும் கள்ளத்தொடர்பை தொடர்ந் தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணவேணியை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சின்னராசு சென்றார். இதனை அறிந்த நளராஜா அவர்களை பின்தொடர்ந்து சமயபுரம் சென்றார். அப்போது மாரியம்மன் கோவில் முடி காணிக்கை மண்டபம் அருகே நின்று கிருஷ்ணவேணியுடன் சின்னராசு பேசிக் கொண்டிருந்தார். இதைக்கண்ட நளராஜா அவர்களை கண்டித்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த நளராஜா, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சின்னராசுவை சரமாரியாக குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து நளராஜா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் நளராஜாவை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை அந்த பகுதியில் தலைமறைவாக இருந்த நளராஜா மற்றும் அவரது நண்பர்களான சமயபுரம் பெரியார் நகர் இந்திரா காலனியை சேர்ந்த ஷேக் அப்துல்லா(45), சமயபுரம் இந்திரா காலனி வள்ளுவர் தெருவை சேர்ந்த அப்துல் ரகுமானின் மகன் அப்துல்கனி(26) ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் நளராஜா வாக்குமூலத்தில் தெரிவித்தது.. கடந்த 3 மாதங்களாக ஆட்டோ டிரைவர் சின்னராசு எனது மனைவியிடம் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதை அறிந்த நான், உறவினர்கள் மூலம் பஞ்சாயத்து செய்து, இனி இருவரும் பேசக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்தோம். அதையும் மீறி தொடர்ந்து எனது மனைவிக்கு சின்னராசு தொல்லை கொடுத்து வந்தார்.


Crime: திருச்சியில் கள்ளக்காதலால் கொலை செய்யபட்ட வழக்கு - 3 பேர் கைது

மேலும் கடந்த வாரம் எனது வீட்டுக்கு ஆட்டோவில் வந்த அவர் தகாத வார்த்தைகளால் என்னை திட்டி, ஏளனமாக பேசினார். இதனால், ஆத்திரமடைந்த நான் அவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்திருந்தேன். இதற்கிடையே எனது மனைவியும், தன்னை சின்னராசு எப்படியோ மயக்கி விட்டதாகவும், அவரிடம் இருந்து தன்னை காப்பாற்றுமாறும் அடிக்கடி என்னிடம் கூறினார். இதனால் சின்னராசுவை கொலை செய்ய திட்டமிட்டு நேற்று முன்தினம் அவரை பின்தொடர்ந்து சமயபுரத்திற்கு வந்தேன். எனது திட்டத்திற்கு உதவியாக சமயபுரத்தை சேர்ந்த எனது நண்பர்களான ஷேக் அப்துல்லா, அப்துல்கனியும் வந்தனர். சமயபுரத்தில் உள்ள ஒரு கடையில் புதிதாக கத்தியை வாங்கி வைத்துக்கொண்டேன். 

இதையடுத்து முடி காணிக்கை மண்டபம் அருகே நின்ற சின்னராசுவிடம் சென்று, கட்டுப்பாடு விதித்ததை மீறி எனது மனைவியிடம் பேசியது குறித்து கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சின்னராசுவை கத்தியால் குத்திக்கொன்றேன். பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்று சமயபுரம் பகுதியில் புதரில் மறைந்திருந்த என்னை போலீசார் பிடித்துவிட்டனர். இவ்வாறு நளராஜா வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 3 பேரையும் திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண்-3 கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதி உத்தரவின்படி 3 பேரையும் திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். கொலை நடந்த சில மணி நேரத்தில் துரிதமாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களை விரைவாக பிடித்த சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசாரை போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

தலைப்பு செய்திகள்

காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
Embed widget