மேலும் அறிய
Crime: கலெக்டர் பெயரை சொல்லி அவரின் உதவியாளரிடமே ரூ. 3 லட்சம் மோசடி - சிவகங்கையில் அதிர்ச்சி
ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் ஆட்சியரின் பெயரிலேயே போலி செல்போன் கணக்கு மூலம் பணம் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேரடி உதயவியாளர்
சிவகங்கையில் ஆட்சியரின் பெயரை பயன்படுத்தி, போலி கணக்கு உருவாக்கி அவரின் நேர்முக உதவியாளரிடம் 3 லட்ச ரூபாயை பெற்று மோசடி நடைபெற்றுள்ள நிலையில் சைபர் கிரைம் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியராக மதுசூதன் ரெட்டி செயல்பட்டு வருகிறார். விவசாயம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாடு, பள்ளி கல்வித்துறை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விசயங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் விவசாயத்துறை நேரடி உதவியாளராக பணிபுரிந்து வருபவர் சர்மிளா.
#sivagangai |சிவகங்கையில் ஆட்சியரின் பெயரில் போலி கணக்கு உருவாக்கி அவரின் நேர்முக உதவியாளரிடம் 3 லட்ச ரூபாயை பெற்று மோசடி நடைபெற்றுள்ள நிலையில் சைபர் கிரைம் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
further reports to follow.., - @abpnadu
| @SivagangaiODFC | @svgsocialmedia |— Arunchinna (@iamarunchinna) July 2, 2022
இவரது மொபைல் போனில் உள்ள வாட்சப் எண்ணிற்கு ஆட்சியர் மதுசூதன் ரெட்டி புகைப்படத்துடன் கூடிய போலி கணக்கில் இருந்து லிங்க் மூலம் ரூ.10 ஆயிரம் அனுப்ப கோரி எஸ்.எம்.எஸ்., வந்துள்ளது. இதனை உண்மை என நம்பிய உதவியாளர் சர்மிளா ரூ. 10 ஆயிரம் அந்த லிங்க் மூலம் அனுப்பியுள்ளார். இதேபோல் அடிக்கடி எஸ்.எம்.எஸ்., வரவே இவரும் 30 முறை 10 ஆயிரம் ரூபாய் என 3 லட்ச ரூபாய் வரை அனுப்பிய நிலையில், சந்தேகம் ஏற்பட்ட அவர் இதுகுறித்து ஆட்சியரின் அலுவலகத்தில் விசாரித்ததில் அது போலியான கணக்கு என்பது தெரியவரவே உடனடியாக சிவகங்கை எஸ்.பி அலுவலகத்தில் செயல்பட்டுவரும் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

உடனடியாக வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் விசாரனையை துவங்கிய நிலையில் அந்த போலி செல்போன் கணக்கு பிஹார் மாநிலத்தில் இருந்து செயல்பட்டு வருவது தெரியவரவே முதல் கட்ட நடவடிக்கைகளை துவங்கியுள்ளனர். ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் ஆட்சியரின் பெயரிலேயே போலி செல்போன் கணக்கு மூலம் பணம் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement