கேரள மாடலுக்கு போதை கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: ஒருவர் கைது... இருவர் தலைமறைவு!
சலின் அந்த பெண்ணின் நண்பர் என்பதால் சலினின் அழைப்பின் பேரில் அந்தப் பெண் சம்பவம் நடந்த ஹோட்டலுக்குச் சென்றுள்ளார். அவர் அங்கு சென்றபோது, குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவரும் அங்கு இருந்துள்ளனர்.
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கொச்சி நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் 27 வயது மாடல் ஒருவர் மூன்று நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த மாத தொடக்கத்தில் நகரின் காக்கநாடு பகுதியில் உள்ள எடச்சிரா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாலியல் வன்கொடுமையினால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து உயிர் பிழைத்த பெண் அளித்த விவரங்களின் அடிப்படையில் குற்றவாளிகளில் ஒருவரான 31 வயதான சலின் குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். மலப்புரத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் பாலியல் வன்கொடுமை வழக்கில் மற்ற இரண்டு குற்றவாளிகள் ஷமீர் மற்றும் அஜ்மல் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடந்துள்ளது. இதில் முக்கிய குற்றவாளியான சலின் ஏற்கனவே பாதிக்கப் பட்ட பெண்ணுக்கு தெரிந்தவர் என்று கூறப்படுகிறது.
சலின் அந்த பெண்ணின் நண்பர் என்பதால் சலினின் அழைப்பின் பேரில் அந்தப் பெண் சம்பவம் நடந்த ஹோட்டலுக்குச் சென்றுள்ளார். அவர் அங்கு சென்றபோது, குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவரும் அங்கு இருந்துள்ளனர். அறையின் உள்ளே வந்த அந்த பெண்ணுக்கு போதைப் பொருள் மற்றும் மதுபானங்கள் கொடுத்துள்ளனர். அதன் பிறகு அந்த பெண்ணை அறையில் அடைத்து வைத்து விடியோ எடுத்திருக்கிறார்கள். பின்னர் அதனை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் என்று மிரட்டியுள்ளனர். மிரட்டி மூவரும் அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள். இது தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள புகாரில், குற்றம் சாட்டப்பட்டவர் தனக்கு மதுபானம் மற்றும் போதைப்பொருட்களை அதிகப்படுத்தியதாக அந்த பெண் கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர் அவளை அறையில் அடைத்து வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவோம் என்று என்னை மிரட்டினர். பின்னர் கூட்டு பாலியவ் வன்கொடுமை செய்தனர் என்று மாடலிங் துறையில் இருக்கும் அந்தப் பெண் வாக்குமூலம் தந்ததாக கூறப்படுகிறது.
“ஹோட்டலின் உரிமையாளர் மற்றும் மேலாளரைத் தேடி வருகிறோம். அந்த பெண் மாடலிங் துறையில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளோம். வெள்ளிக்கிழமை மாலை புகார் அளிக்கப்பட்டதில் இருந்து ஷமீரும் அஜ்மலும் தலைமறைவாகிவிட்டனர்” என்று ஒரு காவல்துறை அதிகாரி கூறியுள்ளார். மலப்புரத்தைச் சேர்ந்த பெண் அளித்த விவரத்தின் அடிப்படையில் முக்கிய குற்றவாளியான ஆலப்புழாவைச் சேர்ந்த சலின் குமார் (31) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஷமீர் மற்றும் அஜ்மல் என அடையாளம் காணப்பட்டு தலைமறைவாகியுள்ள மற்ற இரு குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக உள்ளனர்.