சிலிண்டர் விலை, IFSC, ATM கட்டணம், வருமான வரி விதிகள்.. ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் என்னென்ன?
நாடு முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாகவே கொரோனா தொற்றின் காரணமாக மக்கள் வருமானம் இன்றி தவிக்கும் நிலையில் உள்ளனர்.
நாட்டில் இன்று ( ஜூலை 1) முதல் சிலிண்டர் விலை அதிகரிப்பு, ஏடிஎம்மில் பணம் எடுக்கும் நடைமுறை போன்றவற்றில் பல்வேறு மாறுதல்களை கொண்டு வருவது சாமானிய மக்களின் வாழ்வாதரத்தினைப்பாதிப்பதோடு, தேவையில்லாத செலவுகளையும் அவர்களுக்கு ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
நாடு முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாகவே கொரோனா தொற்றின் காரணமாக மக்கள் வருமானம் இன்றி தவிக்கும் நிலையில் உள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு மேலும் சிரமம் கொடுக்கும் விதமாக பல்வேறு அன்றாடத்தேவைகளிலே அரசு பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வருவதோடு அதனை இன்று முதல் நடைமுறையும் படுத்துகிறது. இந்த நடவடிக்கை மக்களுக்கு தேவையான செலவுகளை அதிகரிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கும் நிலையில், என்னென்ன மாறுதல்கள் நடைமுறைக்கு வரவுள்ளது என நாமும் தெரிந்துகொள்வோம்.
சிலிண்டரின் விலை: பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் மக்கள் ஏற்கனபே பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்த நிலையில், தற்போது மக்களின் அடிப்படைத்தேவைகளில் ஒன்றான சிலிண்டரின் விலையும் இன்று முதல் அதிகரித்துள்ளது. குறிப்பாக வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டரின் விலை 825 லிருந்து ரூ. 25 அதிகரித்து 850ரூபாய் ஆக அதிகரித்துள்ளது. அதேப்போன்று வரத்தக சிலிண்டருக்கான விலை ரூ.84 அதிகரித்து 1687.50 ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 கிலோ எடை கொண்ட வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.825ல் இருந்து ரூ.850 ஆக அதிகரித்துள்ளது. அதாவது ரூ.25 உயர்ந்துள்ளது. அதேபோல 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டரின் விலை ரூ. 84.50 அதிகரித்து ரூ. 1687.50 ஆக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி.ஐ வங்கியின் ஏடிஎம் மற்றும் காசோலை கட்டணங்கள்:
எஸ்.பி.ஐயின் பிஎஸ்பிடி வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்புக்கணக்கில் இருந்து ஏடிஎம்மினைப்பயன்படுத்தி 4 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் 4 முறைக்கு மேல் ஏடிஎம் அல்லது வங்கியின் கிளை மூலமாக பணப்பரிவர்த்தனை செய்யும் பட்சத்தில், ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் பொழுது 15 ரூபாய் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டியும் கட்டணமாக வசூலிக்கப்படவுள்ளது.
அதேப்போன்று, எஸ்.பி.ஐயின் பிஎஸ்பிடி (Basci saving bank deposit) வாடிக்கையாளர்கள் ஓராண்டில் 10 காசோலை தாள்களைப்பயன்படுத்தி இலவசமாக பணபரிவரத்தனை செய்து கொள்ளலாம். ஒரு முறை அதற்கு மேற்பட்ட காசோலையினைப் பயன்படுத்த வேண்டும் எனில் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். குறிப்பாக 10 தாள்களைக்கொண்ட காசோலைப் புத்தகத்திங்கு 40 ரூபாய் கட்டணம் மற்றும் ஜி.எஸ்.டி வசூலிக்கப்படும். இதே 25 காசோலைகள் அடங்கியப் புத்தகத்தின் பரிவர்த்தனைக்கு 75 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி கட்டணம் செலுத்த வேண்டும். மூன்றாம் தரப்பினர் வங்கி காசோலையினைப் பயன்படுத்தி பணம் எடுத்தால் , கண்டிப்பாக KYC யினை வங்கியிடம் சமர்ப்பிக்க எஸ்.பி.ஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது
டிடிஎஸ் பிடித்தம்: நிதிச்சட்டம் 2021 ன் படி , ஜூலை 1 ஆம் தேதியிலிருந்து, வருமான வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு அதிக வருமான வரி பிடித்தம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வருமான வரிப்பிடித்தம் கடந்த 2 ஆண்டுகளில் ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால் அவர் கண்டிப்பாக வருமான வரித்தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிடில் ஜூலை 1 ஆம் தேதி முதல் கட்டணம் இரு மடங்காகும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
சிண்டிகேட் வங்கியின் IFSC மாற்றம்: அரசின் உத்தரவின் படி, சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடன் இணைக்கப்பட்டதையடுத்து புதிய IFSC Code னை சிண்டிகேட் வங்கியின் வாடிக்கையாளர்கள் மாற்ற வேண்டும். SYNB என்பதனை CNRB என மாற்ற வேண்டும். இல்லாவிடில் ஜூலை 1 ஆம் தேதியிலிருந்து எந்தவிதப் பணபரிவர்த்தனைகளையும் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ள முடியாது. அதேப்போன்று சிண்டிகேட் வங்கியின் காசோலையினையும் மாற்றம் செய்ய வேண்டும் என கனரா வங்கி தெரிவித்துள்ளது.
இதேப்போன்று ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கிகள், யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் இணைக்கப்பட்டன இதனால் இந்த இரு வங்கி வாடிக்கையாளர்களும் புதிய செக் புக்கினை பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகனத்தயாரிப்பாளரான ஹூரோ மோட்டாகார்ப் அதன் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஸ்கூட்டரின் விலையினை ஜூலை 1 அதாவது இன்று முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கத்திட்டமிடப்பட்டுள்ளது.