மேலும் அறிய

ஏர் இந்தியாவை வைத்து டாடா போடும் புதிய கணக்கு... மீண்டும் வாங்க இது தான் காரணம்!

ஏர் இந்தியா, விஸ்தாரா மற்றும் ஏர் ஏசியா ஆகிய மூன்று நிறுவனங்களை இணைப்பதற்கு டாடா குழுமம் திட்டமிட்டு வருகிறது.

விமான நிறுவனங்களை பொறுத்தவரை மூன்று பிரிவுகளில் செயல்பட்டு வருகின்றன. ஃபுல் சர்வீஸ் கேரியர்.  இதில் எகானாமி மற்றும் பிஸினஸ் வகுப்பு இருக்கைகள் இருக்கும். ஆனால் டாடா குழுமத்தின் விஸ்தாரா இவை இரண்டுக்கும் இடையில் ப்ரீமியம் எகானமி என்னும் மூன்றாவது பிரிவையும் சேர்த்தது. ஃபுல் சர்வீஸ் கேரியருக்கு அடுத்து குறைந்த கட்ட சேவை (எல்சிசி) மற்றும் மிகவும் குறைந்த கட்டண சேவை (யு.எல்.சி.சி.) ஆகிய பிரிவுகள் உள்ளன.டாடா குழுமத்தில் இரண்டு நிறுவனங்கள் உள்ளன. டாடா குழுமமும் சிங்கப்பூர் ஏர்லைனஸ்ம் (49%) இணைந்து . ஃபுல் சர்வீஸ் கேரியர் நிறுவனமான விஸ்தாராவை நடத்துகிறது.டாடா குழுமமும் ஏர் ஏசியா bhd (16%)-ம் இணைந்து ஏர் ஏசியா இந்தியா என்னும் பட்ஜெட் விமான நிறுவனத்தை நடத்துகிறது.

ஏர் இந்தியாவை வைத்து டாடா போடும் புதிய கணக்கு... மீண்டும் வாங்க இது தான் காரணம்!

இதுதவிர தற்போது பொதுத்துறை நிறுவனமாக உள்ள ஏர் இந்தியா நிறுவனத்துக்கும் விண்ணப்பித்திருக்கிறது. ஏர் இந்தியாவுக்கு ஸ்பைஸ்ஜெட் குழுமமும் விண்ணப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.ஒருவேளை டாடா குழுமத்துக்கு ஏர் இந்தியா கிடைக்கும் பட்சத்தில் ஒரே குழுமத்தில் மூன்று நிறுவனங்கள் செயல்படும் சூழல் உருவாகும். அதனால் மூன்று நிறுவனங்களையும் ஒன்றாக இணைக்கலாமா என டாடா குழுமம் திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. பிரபல ஆங்கில நாளிதழான எகாமிக் டைம்ஸ் இந்த செய்தியை வெளியிட்டிருக்கிறது.ஏர் ஏசியா இந்தியாவில் இருந்து மலேசியாவை சேர்ந்த ஏர் ஏசியா Bhd வெளியேற இருப்பதாக தெரிகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பங்குகளை விற்று வெளியேறும் என தெரிகிறது.அதேபோல விஸ்தாராவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 49 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. ஏர் இந்தியாவுக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூட்டு இல்லாமல் தனியாகவே டாடா குழுமம் விண்ணப்பித்திருக்கிறது.

ஏர் இந்தியாவை வைத்து டாடா போடும் புதிய கணக்கு... மீண்டும் வாங்க இது தான் காரணம்!

ஏர் இந்தியா, விஸ்தாரா மற்றும் ஏர் ஏசியா ஆகிய மூன்று நிறுவனங்களை இணைப்பதற்கு டாடா குழுமம் திட்டமிட்டு வருகிறது. இதுகுறித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கும் தெரியும் என்றும் பேச்சுவார்த்தை இரு தரப்புக்கும் நடந்துவருகிறது என்றும் எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.ஒரே நிறுவனமாக மாறும்போது பெரிய நிறுவனமாக மட்டும் மாறுவதில்லாமல், வழித்தடங்களை சீர் செய்ய முடியும் என டாடா குழுமம் கருதுகிறது. ஒரு வழித்தடத்தில் மூன்று நிறுவனங்கள் இயங்கும்போது அதனை எப்படி சிறப்பாக இயக்கலாம் என திட்டமிடுவதாக தெரிகிறது.தற்போது ஏர் இந்தியா வசம் 172 விமானங்கள், விஸ்தாரா வசம் 48 விமானங்கள், ஏர் ஏசியா இந்தியா வசம் 28 விமானங்கள் உள்ளன.போக்கு வரத்து சந்தையை எடுத்துக்கொண்டால் ஏர் இந்தியா 13.2 சதவீத சந்தையும், விஸ்தாரா 8.3 சதவீத சந்தையையும், ஏர் ஏசியா இந்தியா 5.2 சதவீத சந்தையும்  வைத்திருக்கிறது.இந்த ஆண்டு இறுதிக்குள் ஏர் இந்தியா யாருக்கு என்பது தெரிந்துவிடும். ஏலத் தொகையினை பரிசீலனை செய்யும் பணிகள் நடந்து வருவதாக விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில் ராகேஷ் ஜுன் ஜுன்வாலாவின் ஆகாசா விமான நிறுவனமும் அடுத்த ஆண்டு செயல்பாட்டுக்கு வர இருப்பதால் விமான போக்குவரத்து துறையில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

தலைப்பு செய்திகள்

ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
Gold and silver rate today : திடீரென உயர்ந்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய விலை நிலவரம் இதோ..
திடீரென உயர்ந்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய விலை நிலவரம் இதோ..
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Embed widget