மேலும் அறிய

Tata IPO: முதல் நாளே 140% சதவீதம் லாபம்..ஜாக்பாட் கொடுத்த டாடா டெக்னாலஜிஸ் பங்குகள் - விவரம்!

Tata IPO: டாடா டெக்னாலஜிஸ் பங்குகள் தற்போது 140 சதவீதம் ப்ரீமியம் அளசு உய்ர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

டாடா டெக்னாலஜி (Tata Technologies) ஐ.பி.ஓ. (I.P.O.) பங்கு விற்பனை கடந்த வாரம் முடிந்த நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கிய நிலையதும் மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது.  500 ரூபாய் என்று ஐ.பி.ஓ. விலை முதலீட்டுச் சந்தைக்கு வந்த டாடா டெக்னாலஜிஸ் பங்குகள் தற்போது 140 சதவீதம் ப்ரீமியம் அளசு உய்ர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

டாடா டெக்னாலஜி ஐ.பி.ஓ.

 கடந்த 19 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக டாடா குழும்பத்தில் இருந்து ஐ.பி.ஓ. விற்பனை என அறிவிப்பு வெளியானதும் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.  டாடா டெக்  ஐ.பி.ஓ. (IPO - இனிஷியல் பப்ளிக் ஆஃபர்) முதலீட்டாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஏலம் ஆரம்பித்த முதல் இரு மணிநேரத்திலேயே டாடா டெக் பங்குகளுக்கு போதுமான அளவு முன்பதிவுகள் கிடைத்தன. முதல் நாளில் அறிவிக்கப்பட்ட பங்குகளை விட 6.45 மடங்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

டாடா டெக்னாலஜிஸ் ஐ.பி.ஓ.-வுக்கு வந்த விண்ணப்பங்களில் எண்ணிக்கை மட்டும் ரூ.73 லட்சத்து 30 ஆயிரம். இது எல்.ஐ.சி.-யைவிட அதிகம் என சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். சரி வெற்றிகராமாக விண்ணப்பம் செய்தாயிற்று.  ஐ.பி.ஓ. பங்குகள் பட்டியலிடப்படும் நாள் இன்று. (நவம்பர் 30)

இதன் ஐ.பி.ஓ. பங்கு பட்டியலிடப்படும் நேரம் வழங்கப்படும் விலையை விட கணிசமாக உயராலம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பங்கின் விலை மதிப்பு எதிர்பாராத அளவு உயர்ந்திருப்பதால் முதலீட்டாளர்களுக்கு கொண்டாடாமாகியது. ஆஹா.. கிடைத்தது நல்ல லாபம் என முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

கடந்த வாரம் 5 ஐ.பி.ஒ.-க்கள் (இனிஷியல் பப்ளிக் ஆஃபர்கள்) வெற்றிகரமாக முடிந்திருக்கின்றன. Flair Writing Industries, Fedbank Financial Services, Gandhar Oil Refinery, Indian Renewable Energy Development Agency Ltd மற்றும் Tata Technologies.

ஐந்திற்குமே ஓவர் சப்ஸ்கிரிப்ஷன். சுமார் 7,400 கோடி ரூபாய்க்கு ஐ.பி.ஓ.

டாடா டெக்னாலஜிஸ் பங்குகள் தேசிய பங்குச்சந்தையில் 1200 ரூபாய் விலையிலும், மும்பை பங்குச்சந்தையில் 1199.95 ரூபாய்க்கும் வர்த்தகமானது.

இந்திய பங்குச்சந்தை பரபரப்பாக இயங்கி வருகிறது. டாடா டெக்னாலஜிஸ், காந்தார் ஆயில் ரிஃபைனரி, ஃபெட்பேங்க் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் ஆகிய நான்கு பங்குகள் இன்று ஒரே நாளில் பட்டியலிடப்பட்டுள்ளன. டாடா ஐ.பி.ஓ. பங்குகள் விலை மதிப்பு அதிகரித்துள்ள நிலையில், வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஐ.பி.ஓ. என்றால் என்ன?

பங்குச்சந்தைகளில் ஒரு பெரிய நிறுவனம் அல்லது புதிய நிறுவனம் ஆகிய எதுவாக இருந்தாலும் நுழைய வேண்டும் என்றால் அது ஐ.பி.ஓ. என்ற முறை மூலமாக நுழைய முடியும். அதாவது ஐபிஓ என்பது முதல் முறையாக ஒரு நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் விற்பனை செய்யப்படும் முறை. இதன் மூலமாக ஒரு நிறுவனம் தன்னுடைய பங்குகளை முதல் முறையாக மக்களிடம் விற்பனை செய்ய முடியும். ஐ.பி.ஓ. மூலம் அந்த நிறுவனத்தின் பங்குகள் மக்களிடம் விற்பனைக்கு வரும். அதற்கு முன்பு வரை அந்த நிறுவனத்தின் பங்குகள் நிறுவனத்தை தொடங்கியவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இடம் இருக்கும். இந்த அமைப்பில் தங்கள் நிறுவனத்தின் பங்குகளை பொதுமக்களுக்கு (டீ-மேட் கணக்கு வைத்திருக்கும் விண்ணப்பதாரர்கள்) விற்பதன் மூலம் நிதி திரட்டப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget