Stock Market Update: தொடர்ந்து சரிவில் இந்திய பங்குச்சந்தை - சென்செக்ஸ் 200 புள்ளிகள் வீழ்ச்சி!
Stock Market Update: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.
Stock Market Update: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.
பங்குச்சந்தை:
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 181.67 அல்லது 0.28% புள்ளிகள் குறைந்து 66,447.57 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 67.20 அல்லது 0.34% சரிந்து 19,557.50 ஆக வர்த்தகமாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. இந்த வாரத்தில் செவ்வாய்கிழமை மட்டும் வர்த்த நேர தொடக்கத்தில் வர்த்தகம் ஏற்றம் கண்டது. ஆனால், அடுத்த இரண்டு செஷன்களும் சரிவுடம் நிறைவடைந்தது. இன்றும் பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது. உலக அளவில் நிலவும் அசாதார சூழல், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தொடரும் போர் சூழல் உள்ளிட்ட பல காரணங்களால் பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
நெஸ்லே, அதானி எண்டர்பிசிஸ், கோடாக் மஹிர்ந்திரா, இந்தஸ்லேண்ட் வங்கி, அதானி போர்ட்ஸ், டாடா மோட்டர்ஸ், டி.சி.எஸ்., சன் ஃபார்மா, கோல் இந்தியா, மாருதி சுசூகி, டைட்டன் கம்பெனி,பாரதி ஏர்டெல், விப்ரோ, ஹெட்.டி.எஃப்.சி. வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.
நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
ஐ.டி.சி., ஹெட்.யு.எல்., பவர்கிரிட் கார்ப், ஹெட்.சி.எல். டெக்., டிவிஸ் லேப்ஸ், டெக் மஹிந்திரா, அப்பல்லோ மருத்துவமனை, டாக்டர். ரெட்டி லேப்ஸ், சிப்ளா, ஜெ.எஸ்.டபுள்யு, ஸ்டீல், ஹீரோ மோட்டர்கார்ப், பஜாஜ் ஃபினான்ஸ், எஸ்.பி.ஐ., ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், ஏசியன் பெயிண்ட்ஸ், லார்சன், பிரிட்டானியா, அல்ட்ராடெக் சிமெண்ட், இன்ஃபோசிஸ், ஈச்சர் மோட்டர்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
சென்செக்ஸ் 213 புள்ளிகள் வரை சரிந்துள்ளது. 1,660 பங்குகள் லாபத்துடன் 1,195 பங்குகள் சரிவுடனும் 105 பங்குகள் மாற்றமின்றி தொடர்ந்தது.