Stock Market Today:சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்த இந்திய பங்குச்சந்தை!
Stock Market Today: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. அது குறித்த விவரத்தை இங்கே காணலாம்.
இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. சென்செக்ஸ், நிஃப்டி கடந்த வாரம் வரலாறு காணாத அளவில் உயர்ந்த நிலையில், வாரத்தில் முதல் நாளே சரிவை பதிவு செய்துள்ளது.
வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 36.22 அல்லது 0.45% புள்ளிகள் சரிந்து 79,960.38 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 3.30 அல்லது 0.14% புள்ளிகள் சரிந்து 24,320.55 ஆக வர்த்தகமானது.
வர்த்தக நேர தொடக்கத்தில்., சென்செக்ஸ் 105.87 புள்ளிகள் சரிந்து 79,890.73 ஆகவும் நிஃப்டி 29 புள்ளிகள் குறைந்து 24,294.60 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கியது. பங்குச்சந்தை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சரிவுடன் வர்த்தகமானது.
எல் & டி நிறுவன பங்குகளின் மதிப்பு உயர்ந்திருந்தது. பி.எஸ்.இ. எண்ணெய் மற்றும் Gas இண்டெக்ஸ் 0.6% அதிகரித்தது. ஆயில் இந்தியா, ஓன்.என்.ஜி.சி., ஐ.ஓ.சி, ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு அதிகரித்து இருந்தது.
பஞ்சாப் நேசனல் வங்கியின் கடன் முடிவுக்கு கொண்டுவர பி.சி. ஜுவல்லரி நிறுவனத்துடன் ஒரு முறையில் மொத்த பணத்தையும் திரும்பி தருவதற்கு ஒப்பந்தம் கையெடுத்தாகியுள்ளது.
பெட்ரோலிய நிறுவனமான பி,பி.சி.எல். கடந்த ஆண்டைவிட இந்தாண்டு நல்ல லாபத்தை பதிவு செய்துள்ளதால் நிறுவனம் விற்பனை செய்யப்படாது என்று அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். நண்பகல் வர்த்தகத்தில் சென்னை பெட்ரோ பங்குகள் 3-5 % உயர்ந்தது.
சுமார் 1570 பங்குகள் லாபத்துடனும் 1988 பங்குகள் சரிவுடனும் 95 பங்குகள் எந்த மாற்றமும் இன்றி வர்த்தகமாகின. துறை ரீதியிலாக கேப்பிடல் கூட்ஸ், FMCG, எண்ணெய், ஆட்டோமொபைல், வங்கி, சுகாதார துறை, மெட்டல், மின்னாற்றல் துறை, தொலைத்தொடர்பு துறை உள்ளிட்டவை 0.4-0.8% சரிவை சந்தித்தது.
கடந்த ஒரு வாரமாக பங்குச்சந்தை உச்சத்தில் வர்த்தகமாகி வந்தது. சென்செக்ஸ் 80 ஆயிரம் புள்ளிகளை கடந்தும் நிஃப்டி 24 ஆயிரம் புள்ளிகளிலும் வர்த்தகமாகியது. இப்போது பங்குச்சந்தை சரிவில் உள்ளது. நாளைய வர்த்தநேரத்தில் மீண்டும் சரிவிலிருந்து மீளுமா என்று தெரியவில்லை.
ஐ.டி.சி., நெஸ்லே, டாடா கான்ஸ் ப்ராட், ஹெச்.டி.எஃப்.இ. லைஃப்., விப்ரோ, இன்ந்போசிஸ், ரிலையன்ஸ், பிரிட்டானியா, பாரதி ஏர்டெல், கோல் இந்தியா, ஈச்சர் மோட்டர்ஸ், இந்தஸ்லேண்ட் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, கோடாக் மஹிந்திரா வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமாகின.
டிவிஸ் லேப்ஸ், டைட்டன் கம்பெனி, பி.பி.சி.எல்., ஸ்ரீராம் ஃபினான்ஸ், அதானி போர்ட்ஸ், ஜெ.எஸ்.டபுள்யு. ஸ்டீல், சிப்லா, டாடா ஸ்டீல், ஏசியன் பெயின்ஸ், பஜாஜ் ஆட்டோ, அதானி எண்டர்பிரைஸ், எம்& எம், ஹீரோ மோட்டர்கார்ப், எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெச்.டி.எஃப்.சி., சிமெண்ட், மாருது சுசூகி, என்.டி.பி.சி., பஜாஜ் ஃபின்சர்வ், பக்ஜாஜ் ஃபினான்ஸ், டி.சி,எஸ்., எஸ்.பி.ஐ., ஹிண்டால்கோ, க்ரேசியம், அப்பல்லோ மருத்துவமனை ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 83.50 ஆக இருந்தது. சில காரணங்களால் நிஃப்டி,செக்செக்ஸ் சரிவுடன் முடிந்துள்ளது. ஆசிய சந்தைகளில் நிலவும் மந்தமான தன்மையால் இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகியதாக பங்குச்சந்தை முதலீட்டாளர் பிராசாந்த் தெரிவித்தார்.