Stock Market: 800 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்... இன்றைய பங்குச்சந்தை நிலவரம்!
Stock Market: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.
Stock Market Update: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 847.27 அல்லது 1.18 % புள்ளிகள் உயர்ந்து 72,568.45 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி260.80 அல்லது 1.14% உயர்ந்து 21,894.55 ஆக வர்த்தகமாகியது.
லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்..
இன்ஃபோசிஸ், ஓ.என்.ஜி.சி., டெக் மஹிந்திரா, எல்.டி.ஐ மிண்ட்ரீ, டாடா கான்ஸ் ப்ராட், டி.சி.எஸ்., விப்ரோ, ஹெச்.சி.எல். டெக்., எஸ்.பி.ஐ., லார்சன், பாரதி ஏர்டெல், ஹிண்டால்கோ, ஹீரோ மோட்டர்கார்ப், இந்தஸ்லேண்ட் வங்கி, ஐ.சிடி.டைட்டன் கம்பெனி, சன் பார்மா, அதானி எண்டர்பிரைசஸ், கோடாக் மஹிந்திரா, எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, ஜெ.எஸ்.டபுள்யு, அதானி போர்ட்ஸ், பிரிட்டானியா, பஜாஜ் ஃபினான்ஸ், என்.டி.பி.சி., டாடா மோட்டர்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.
நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்..
சிப்ளா, அப்பல்லோ மருத்துவம்னை, அல்ட்ராடெக் சிமெண்ட்,பவர்கிரிட் கார்ப், பஜாஜ் ஃபினான்ஸ், ஹெச்.டி.எஃப்.சி., கோல் இந்தியா, ஈச்சர் மோட்டர்ஸ், ஆக்சிஸ் வங்கி, டிவிஸ் லேப்ஸ், மாருது சுசூகி, நெஸ்லே, ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபினான்ஸ்,டாக்டர். ரெட்டிஸ் லேப்ஸ், என்.டி.பி.சி. ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகின.
கடந்த வாரம் சில ஏற்ற இற்றக்கங்களை சந்தித்த சந்தை இந்த வாரம் ஐ.டி. செக்டார் ஏற்றம் கண்டது. ஓ.என்.ஜி.சி., டெக் மஹிந்திரா, டி.சி.எஸ். ஆகிய நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமாகின. நிஃப்டி 22 ஆயிரத்தை தொடும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஐ.டி, வங்கி உள்ளிட்ட துறைகள் இந்திய பங்குச்சந்தையில் ஏற்றம் கண்டு புதிய உச்சம் தொட்டது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து 82.92 ஆக இருந்தது.
மேலும் வாசிக்க..
பின் நம்பர் இல்லாமல் டிஜிட்டல் பேமண்ட்...எப்படி சாத்தியம்? புதிய சேவையை அறிமுகம் செய்த பேடிஎம்