Share Market: ஏற்றத்துடன் முடிந்த இந்திய பங்குச்சந்தை! 18,600 புள்ளிகளில் வர்த்தகமான நிஃப்டி!
Share Market: இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் முடிவடைந்திருப்பதால் முதலீட்டாளர்கள், பங்குதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Share Market Closing Bell: இன்றைய வர்த்தக நேர முடிவில் இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடந்துள்ளன.
மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 163.71 அல்லது 0.26 % புள்ளிகள் அதிகரித்து 63,011.15 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 38 அல்லது 0.20% புள்ளிகள் உயர்ந்து 18,642. 45 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின. இன்றைய காலை வர்த்தக நேர தொடக்கத்தில், ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது.
லாபம் - நஷ்டம்
பஜார்ஜ் ஃபின்சர்வ், ஹெச்.டி.எஃப்.சி. லைஃப், கோடாக் மஹிந்திரா, ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்.சி.எல்., இந்தஸ்லேண்ட் வங்கி, க்ரேசியம், அல்ட்ராடெக் சிமெண்ட், இன்ஃபோசிஸ், விப்ரோ, மாருதி சுசூகி, சிப்ளா,ஏசியன் பெயிண்ட்ஸ், பவர்கிரெட் கார்ப், ஐ.டி.சி. உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
அப்பல்லோ மருத்துவமனை, அதானி எண்டர்பிரைசர்ஸ், டெக் மஹிந்திரா, டாடா ஸ்டீல், சன் பார்மா, டிவிஸ் லேப்ஸ், நெஸ்லே, கோல் இந்தியா, பஜார்ஜ் ஆட்டோ, அதானி போர்ட்ஸ்உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.
காலை நிலவரம்:
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 507.22 அல்லது 0.75 % புள்ளிகள் உயர்ந்து 63,008.91 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 141.85 அல்லது 0.67% புள்ளிகள் உயர்ந்து 18,641.20 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது. காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ், 6 மாதங்களுக்கு பிறகு 63 ஆயிரத்தை தொட்டது முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.