Stock Market : பங்குச் சந்தைகளில் அதிகரிப்புடன் தொடங்கிய நிஃப்டி, சென்செக்ஸ்; லாபத்தில் மஹிந்திரா, விப்ரோ
இன்று காலை தொடங்கிய பங்குச் சந்தையானது, நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் ஆகிய இரண்டு புள்ளிகளும் அதிகரிப்புன் தொடங்கின
பங்குச் சந்தைகள் நிலவரம்:
(இன்று) வியாழன் கிழமை காலையில் இந்திய பங்குச் சந்தைகள் உற்சாகத்துடன் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 585.21 புள்ளிகள் (அல்லது) 0.99 சதவீதம் அதிகரித்து 59,402.50 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 161.40 புள்ளிகள் (அல்லது) 0.92 சதவீதம் அதிகரித்து 17, 696.20 புள்ளிகளாக உள்ளது.
அதிக லாபம் பெற்றவர்கள் & நஷ்டம் அடைந்தவர்கள் :
நிஃப்டி புள்ளிகளில் ஐச்சர் மோட்டார்ஸ், டெக் மஹிந்திரா, விப்ரோ, ஐசிஐசிஐ வங்கி மற்றும் இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்கள் ஆதாயம் அடைந்துள்ளன.
நிஃப்டி புள்ளிகளில் ஹிண்டல்கோ தொழிற்சாலைகள், டாடா நுகர்வோர் தயாரிப்புகள், டிவிஸ் லேப்ஸ், அப்பலோ மருத்துவமனைகள், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இறக்கம் கண்டன
தேசிய பங்குச் சந்தை தரவுகளின்படி, இன்று காலை நிலவரப்ப்டி, நிஃப்டி 50 பங்குகளில் பெரும்பாலானவை பச்சை நிறத்தில் ( ஏற்றம்) வர்த்தகமாயின.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்த வரை, டாடா மோட்டார்ஸ் பங்குகள் 52 வாரத்திற்கு பிறகு ஒரு பங்கின் விலை ரூ.226 அதிகரித்துள்ளது. மேலும் 2023 ஆம் நிதி ஆண்டுக்கான, முதலாவது காலாண்டில் நிகர லாபம் ரூ. 611 கோடியை எட்டியது.
பணவீக்கம் குறைவு:
உலக அளவில் பணவீக்கத்தின் அளவு சற்று குறைந்து வருகிறது. அதனால் நிறுவனங்களின் பங்குகளின் செய்வது அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து உலகத்திலுள்ள பெரும்பாலும் சற்று உயர்ந்துள்ளதாக பொருளாதார் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றன. இந்த பங்குகளின் உயர்வானது கடந்த ஏப்ரல் மாத்திற்கு பின் மீண்டும் ஏற்பட்டுள்ளது.
உலக நிலவரம்:
சமீபத்திய தரவுகளின்படி, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்.ஐ.ஐ), இந்திய மூலதன சந்தையில் புதன்கிழமை ₹ 1,061.88 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
வால் ஸ்ட்ரீட்டின் பங்குகளும் ஏற்றம் கண்டுள்ளன. எஸ் அண்ட் பி 500 ஃப்யூச்சர்ஸ் மற்றும் நாஸ்டாக் ஃப்யூச்சர்ஸ் ஆகிய இரண்டும் புதன்கிழமை 0.3 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தன.
ஆசிய பசிபிக் பங்குகளின் எம்.எஸ்.சி.ஐ.யின் குறியீட்டெண் 1.0 சதவீதம் உயர்ந்தது, இது ஆஸ்திரேலியாவில் 1.2 சதவீதமும், தென் கொரியாவில் 1.4 சதவீதமும் மற்றும் ஹாங்காங்கில் 1.2 சதவீதமும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
Also Read: Elon Musk: ட்விட்டர் சண்டை! என்னவேணாலும் நடக்கலாம்! டெஸ்லா பங்குகளை விற்றுத்தீர்க்கும் எலான்!
Indian stocks rise sharply as inflation in US moderates
— ANI Digital (@ani_digital) August 11, 2022
Read @ANI Story | https://t.co/0dPBuWW6Tr#Sensex #Nifty #StockMarket #USInflation #nifty50 pic.twitter.com/y1TwHQQOZJ
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்