Stock Market Update: 250 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்; 19 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகமான நிஃப்டி; பங்குச்சந்தை நிலவரம்!
Stock Market Update:இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது.
![Stock Market Update: 250 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்; 19 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகமான நிஃப்டி; பங்குச்சந்தை நிலவரம்! Stock Market Sensex gains 250 points; Nifty above 19,750; media pack top sectoral loser Stock Market Update: 250 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்; 19 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகமான நிஃப்டி; பங்குச்சந்தை நிலவரம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/18/48c10f3a27ea46d4ea722443d29eac4c1689674325915333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Share Market Closing Bell: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது.
வர்த்த நேர முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 189.46 அல்லது 0.28 % புள்ளிகள் அதிகரித்து 66,789.41 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 37.05 அல்லது 0.20% புள்ளிகள் உயர்ந்து 19,751.65 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.
சென்செக்ஸ் கடந்த ஒரு வாரமாக இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. சென்செக்ஸ் 66 ஆயிரம் புள்ளிகள் கடந்து வர்த்தகமாகி புதிய சாதனை படைத்துள்ளது.
பங்குச்சந்தை லாபத்துடன் வர்த்தமாகியது முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரமாக முதலீட்டாளர்கள், வெளிநாட்டில் இருந்து முதலீடுகள் அதிகம் வருவதால் சென்செக்ஸ் 65 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தமாகியது.
லாபத்துடன் வர்த்தகமாகும் நிறுவனங்கள்:
இன்ஃபோசிஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச்.சி.எல்., ரிலையன்ஸ், ஹீரோ மோட்டர்கார்ப், ஐ.சி.சி.ஐ. வங்கி. டாடா கான்ஸ், டெக் மகிந்திரா, பஜார்ஜ் ஆட்டோ, விப்ரோ, லார்சன், பஜார்ஜ் ஃபின்சர்வ், என்.டி.பி.சி., எஸ்.பி.ஐ. பார்மா, பவர்கிரிட் கார்ப், ஈச்சர் மோட்டர்ஸ், ஐ.டி.சி., டி.சி.எஸ்., எம் & எம் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபத்தில் வர்த்தகமாகி வருகிறது.
நஷ்டத்துடன் வர்த்தகமாகும் நிறுவனங்கள்:
ஹெச்.டி.எஃப்.சி. லைப், பிரிட்டானியா, எஸ்.பி.ஐ., பஜார்ஜ் ஃபினான்ஸ், டைட்டன் கம்பெனி, அப்பல்லொ மருத்துவமனை, டிவிஸ் லேப்ஸ், சன் பார்மா, டாடா மோட்டர்ஸ், ஜெ.எஸ்.டபுள்யு, டாடா ஸ்டீல், க்ரேசியம், ஹிண்டால்கோ, அதானி போர்ட்ஸ், கோடாக் மகிர்ந்திரா , சிப்ளா, ஆக்ஸிஸ் வங்கி, மாருதி சுசூகி, பாரதி ஏர்டெல், உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் நஷ்டத்தில் வர்த்தகமாகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)