மேலும் அறிய

Disney Lay Off: பணிநீக்கம் அறிவித்த டிஸ்னி நிறுவனம்.. 4000 பேர் வேலை காலி, இந்தியர்களுக்கு எவ்வளவு பாதிப்பு?

டிஸ்னி நிறுவனத்தில் மேலும் நான்காயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிஸ்னி நிறுவனத்தில் மேலும் நான்காயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் மறுசீரமைப்பு பணிகள் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

4000 பேர் பணிநீக்கம்:

டிஸ்னி குழுமம் தனது முதற்கட்டபணிநீக்க நடவடிக்கையை திங்கட்கிழமை தொடங்கியுள்ளது. இந்த நடவடிக்கை வரும் வியாழன் வரை தொடரும் என கூறப்படுகிறது. அந்த குழுமத்தின் டிஸ்னி எண்டர்டெயின்மென்ட், ஈ.எஸ்.பி.என்.,  டிஸ்னி பூங்காக்கள், டிஸ்னி பொருட்கலின் விற்பனை நிலையங்களில் பணி செய்யும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர் என கூறப்படுகிறது. குறிப்பாக கலிபோர்னியா, நியூயார்க், கன்னெக்டிகட் மற்றும் எல்ஸ்வேர் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஊழியர்கள் தான், இரண்டாம் கட்ட பணிநீக்க நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”2 மாதங்களுக்கு தொடரும்”

இதுதொடர்பாக ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள தகவலில், ”நிறுவனத்தின் பல்வேறு பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகள் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தொடரும். ஏற்கனவே தெரிவித்ததை போன்று கோடைகாலத்திற்கு முன்பாகவே அடுத்தகட்ட பணிநீக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2ம் கட்ட பணி நீக்க நடவடிக்கைகள் மூலம், மேலும் மூவாயிரம் பேரின் வேலை பறிக்கப்படும் என கூறப்படுகிறது.

திட்டம் என்ன?

5.5 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கான செலவைச் சேமித்து அதன் ஸ்ட்ரீமிங் வணிகத்தை லாபகரமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, 7000 ஊழியர்களை பணிநீக்கம் செய்து டிஸ்னி நிறுவனம் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. அதனை தொடர்ந்து முதற்கட்டமாக தற்போது நான்காயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பணியை டிஸ்னி நிறுவனம் தொடங்கியுள்ளது. இது அண்மையில் மீண்டும் டிஸ்னியின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற பாப் எல்கரின் முடிவு என்பது குறிப்பிடத்தக்கது. 

இரண்டாம் கட்ட பணிநீக்கம்:

Disney+ இன் சந்தாதாரர்கள், வெகுவாக சரிந்து 168.1 மில்லியன் வாடிக்கையாளர்களாக குறைந்தது தான் ஊழியர்களின் பணி நீக்கத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.  உலகளவில் மிகப்பெரிய கேளிக்கை பூங்கா நிறுவனம்தான் இந்த வால்ட் டிஸ்னி. இது பல்வேறு நாடுகளில் தங்களது கேளிக்கை பூங்கா கிளைகளை நிறுவியுள்ளது. இந்த நிறுவனத்திற்கு கீழ் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காலக்கட்டத்தில் வால்ட் டிஸ்னி நிறுவனம் 32 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இந்த சூழலில், 5.5 அமெரிக்க டாலர்களை செலவை சேமிக்கும் வகையில் சுமார் 7 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. உலக அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமக ஏற்கனவே, ட்விட்டர், மெட்டா போன்ற பல பெருநிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
Gold and silver rate today : திடீரென உயர்ந்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய விலை நிலவரம் இதோ..
திடீரென உயர்ந்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய விலை நிலவரம் இதோ..
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
Gold Rate Today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.? இதோ இன்றைய விலை நிலவரம்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.? இதோ இன்றைய விலை நிலவரம்

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Jaguar Type 01 EV Car: மின்சார சொகுசு ரதம்.! 1015 HP சக்தியுடன் புயலாக வரும் ஜாக்குவாரின் புதிய EV கார்; முழு விவரம்
மின்சார சொகுசு ரதம்.! 1015 HP சக்தியுடன் புயலாக வரும் ஜாக்குவாரின் புதிய EV கார்; முழு விவரம்
Tata Avinya X Launch: லுக்கு அள்ளுதே.! EV கார் சந்தையை தெறிக்கவிட வரும் டாடா அவின்யா.! எப்போது அறிமுகம் தெரியுமா.?
லுக்கு அள்ளுதே.! EV கார் சந்தையை தெறிக்கவிட வரும் டாடா அவின்யா.! எப்போது அறிமுகம் தெரியுமா.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! வியாழகிழமை (08.10.2026) எந்தெந்த ஏரியால மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
சென்னை மக்களே.! வியாழகிழமை (08.10.2026) எந்தெந்த ஏரியால மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
Embed widget