மேலும் அறிய

ஆன்லைனில் சாராய ஏலம்: புதுச்சேரி-தமிழக எல்லை கடைகளை எடுக்க கடும் போட்டி!

புதுச்சேரி, காரைக்காலில் சாராயம், கள்ளுக் கடைகள்ஆன்லைனில் ஏலம் எடுப்பதில் வியாபாரிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதுச்சேரி, காரைக்காலில் சாராயம், கள்ளுக்கடைகள் ஏலம் இன்று ஆன்லைனில் நடக்கிறது. மதுவிலை உயர்வால் சாராயக்கடைகளை ஏலம் எடுக்கக் கடும் போட்டி நிலவுகிறது. புதுச்சேரி, காரைக்காலில் 108 சாராயக்கடைகள், 89 கள்ளுக்கடைகள் என மொத்தம் 197 கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் அனைத்துக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆன்லைனில் பொது ஏலம் விடப்படும். கடைகளுக்கு ஆண்டு கிஸ்தி தொகை ஏலம் மூலம் நிர்ணயிக்கப்படும். ஒரு குத்தகை ஆண்டு என்பது ஜூலை 1ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதியில் முடியும்.

முதல் ஆண்டு குத்தகை எடுக்கப்படும் கடைகளுக்கு அடுத்த 2 குத்தகை ஆண்டுகளுக்கு முந்தைய ஆண்டின் கிஸ்தி தொகையில் 5 சதவீதம் உயர்த்தப்பட்ட கிஸ்தி தொகை செலுத்தினால் கடையின் உரிமம் புதுப்பித்துத் தரப்படும். 3 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் பொது ஏலம் கடந்த மாதம் 23ஆம் தேதி நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோன  பரவல் காரணமாக கிஸ்தி தொகையை ஒரு மாதம் பெற்று ஒரு மாத உரிமம் கால நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்த காலக்கெடுவும் இன்றோடு நிறைவடைகிறது.

 


ஆன்லைனில் சாராய ஏலம்: புதுச்சேரி-தமிழக எல்லை கடைகளை எடுக்க கடும் போட்டி!


இதையடுத்து மதுபானக் கடைகள், கள்ளுக்கடைகளுக்கு ஆன்லைனில் ஏலம் நடந்தது. நேற்று காலை 11 மணி முதல் 12 மணி வரை கள்ளுக்கடைகள், 12 மணி முதல் மதியம் ஒரு மணி வரை சாராயக்கடைகளுக்கு ஆன்லைனில் ஏலம் நடந்தது. புதுவையில் கரோனா முதல் அலை ஊரடங்கு தளர்வில் மதுபானக்கடைகள் திறக்கப்பட்ட போது சிறப்பு வரி விதிக்கப்பட்டது. இதனால் தமிழகத்துக்கு இணையாகப் புதுவையில் மதுபானங்கள் விலை உயர்ந்தது. இதனால் மதுப்பிரியர்கள் சாராயக் கடைகளை நாடினர். இதனால் சாராய வியாபாரம் களை கட்டியது.

இப்போது கரோனா 2-வது அலை ஊரடங்கு தளர்வைத் தொடர்ந்து மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. கரோனா வரியை நீக்கினாலும், இப்போது மதுபானங்களின் விலை அதிகபட்ச சில்லறை விற்பனை விலையிலிருந்து 20 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இதனால் ரூ.100க்கு விற்ற மதுபானங்களின் விலை ரூ.120 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் பலர் மீண்டும் சாராயக்கடைகளை நாடத் தொடங்கியுள்ளனர்.



ஆன்லைனில் சாராய ஏலம்: புதுச்சேரி-தமிழக எல்லை கடைகளை எடுக்க கடும் போட்டி!

இனிவரும் காலத்திலும் மதுபானங்களின் விலை உயர்வால் சாராய விற்பனை அதிகரிக்கும் என வியாபாரிகள் கருதுகின்றனர். இந்த நிலையில் சாராயக்கடை, கள்ளுக்கடை ஏலம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. ஆன்லைனில் நடந்த ஏலத்துக்காகப் பலரும் முன்பதிவு செய்திருந்தனர். நேரம் தொடங்கியது முதல் பலரும் போட்டி போட்டிக்கொண்டு சாராயக் கடைகளுக்கு ஏலம் கேட்டனர். அதிக விலைக்கு ஏலம் கேட்டவர்களுக்கு சாராயக்கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. சாராயக்கடைகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதால் புதுவை அரசுக்குக் கூடுதல் வருவாய் ஏற்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது. கலால்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, புதுச்சேரி எல்லையோரக் கடைகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. அத்துடன் கடந்த ஆண்டு ரூ.80 கோடி வருவாய் கிடைத்தது. இம்முறை ரூ.90 கோடி வரை வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று குறிப்பிட்டனர்.

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (17.08.2026): வாரத்தின் முதல் நாள்.. வரவு வருமா, செலவு வைக்குமா- கேரளா லாட்டரி முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (17.08.2026): வாரத்தின் முதல் நாள்.. வரவு வருமா, செலவு வைக்குமா- கேரளா லாட்டரி முடிவுகள்!
Gold and silver rate today : அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
LIVE | Kerala Lottery Result Today (16.08.2026): ஞாயித்துக்கிழமை லக் அடிக்கப்போவது யாருக்கு? கேரளா லாட்டரி முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (16.08.2026): ஞாயித்துக்கிழமை லக் அடிக்கப்போவது யாருக்கு? கேரளா லாட்டரி முடிவுகள்!
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
Embed widget