மேலும் அறிய

Petrol Diesel Price: 202வது நாளாக அதே விலை..! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

சென்னையில் மாற்றமின்றி இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை விற்பனையாகிறது.

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இருநூறு நாள்களைக் கடந்து மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40 க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து ஐந்து மாநிலத் தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 

இதன்பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22 ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 202ஆவது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (டிசம்பர் 9ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. தற்போது கிட்டதட்ட விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை இருநூறு நாள்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

இனி எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையா..? 

கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை' 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.

 இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.

நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 

2025 இலக்கு:

இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.

பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Today Gold Rate: எகிறும் தங்கம் விலை.. பதறும் நடுத்தர மக்கள்.. இன்று சவரனுக்கு எவ்வளவு உயர்ந்தது?
Today Gold Rate: எகிறும் தங்கம் விலை.. பதறும் நடுத்தர மக்கள்.. இன்று சவரனுக்கு எவ்வளவு உயர்ந்தது?
Gold Rate Today: தீபாவளிக்கு முன் அதிர்ச்சி! மீண்டும் ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை..! வெள்ளி நிலவரம் என்ன?
Gold Rate Today: தீபாவளிக்கு முன் அதிர்ச்சி! மீண்டும் ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை..! வெள்ளி நிலவரம் என்ன?
WHATS APP-இல் நொடிப்பொழுதில் PF விவரங்களை பெறும் வசதி ! - சேவையை பெறுவது எப்படி?
WHATS APP-இல் நொடிப்பொழுதில் PF விவரங்களை பெறும் வசதி ! - சேவையை பெறுவது எப்படி?
ஆதவற்றோர், முதியோருக்கு வாழ்நாள் முழுவதும் இலவச தங்குமிடம்! நீதா அம்பானியின் பிரம்மாண்ட குடியிருப்பு எங்கு அமைகிறது?
ஆதவற்றோர், முதியோருக்கு வாழ்நாள் முழுவதும் இலவச தங்குமிடம்! நீதா அம்பானியின் பிரம்மாண்ட குடியிருப்பு எங்கு அமைகிறது?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்! இவ்வளவு வீக்கான முதல்வரை தமிழகம் பார்த்தது இல்லை! அட்டாக் மோடில் ஸ்டாலின்
தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்! இவ்வளவு வீக்கான முதல்வரை தமிழகம் பார்த்தது இல்லை! அட்டாக் மோடில் ஸ்டாலின்
TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?
TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?
Diwali Bonus: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்! தீபாவளி போனஸ் தொடர்பான அடுத்த அறிவிப்பு!
Diwali Bonus: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்! தீபாவளி போனஸ் தொடர்பான அடுத்த அறிவிப்பு!
தீபாவளி வியாபாரத்தை மொத்தமா கெடுத்த மழை! சேலத்தை புரட்டிப்போட்ட கனமழை... மிதக்கும் வாகனங்கள்!
தீபாவளி வியாபாரத்தை மொத்தமா கெடுத்த மழை! சேலத்தை புரட்டிப்போட்ட கனமழை... மிதக்கும் வாகனங்கள்!
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
வெந்து தணிந்தது காடு என்றதும் சிரிப்பலை...மாணவர்களுக்கு கலகலப்பாக முதல்வர் விஜய் அட்வைஸ்
வெந்து தணிந்தது காடு என்றதும் சிரிப்பலை...மாணவர்களுக்கு கலகலப்பாக முதல்வர் விஜய் அட்வைஸ்
இன்னோவா கிரிஸ்டா சீரிஸ் விலை உயர்வு: வேரியன்ட் வாரியாக எவ்வளவு அதிகரித்துள்ளது? புதிய விலைப்பட்டியல் இதோ
இன்னோவா கிரிஸ்டா சீரிஸ் விலை உயர்வு: வேரியன்ட் வாரியாக எவ்வளவு அதிகரித்துள்ளது? புதிய விலைப்பட்டியல் இதோ
Diwali Special Train: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு! முழு விவரம்!
Diwali Special Train: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு! முழு விவரம்!
Embed widget